பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுநமக்குத் தெரிய வேண்டியவை


கமலம்: என்னாங்க இவ்வளவு நேரம், ஏதேனும் கூட்டத்துக்குப் போனீர்களோ, எங்கே என்ன கூட்டம், இராத்திரி பத்து மணிக்கு மேலாச்சே.

சுந்தரம்: ஆமாம் கமலம், கூட்டத்துக்குத்தான் போய் வந்தேன். பத்திரிகை படிக்க வாசகசாலைக்குப் போனேன், அங்கே கூட்டம் என்று சொன்னார்கள், போனேன்.

கமலம்: கூட்டம் எங்கே, யார் பேசினார்கள்?

சுந்தரம்: பஞ்சாயத்து ஆபீசுப் பக்கத்தில் பாரதி மைதானம் இருக்கிறதல்லவா, அங்குதான் கூட்டம், சென்னையிலிருந்து ஒரு பெரியவர் வந்து பேசினார்.

கமலம்: என்ன பேசினார், காங்கிரசைப் பற்றியா, காங்கிரசுக்கு விரோதமாகவா? எப்போதும் இந்த இரண்டு பேச்சுத்தானே.

சுந்தரம்: ஆமாம் இரண்டு விஷயங்கள் தான். ஆனால் இன்று அவர் காங்கிரசைப் பற்றியும் பேசவில்லை, காங்கிரசுக்கு விரோதமாகவும் பேசவில்லை.

கமலம்: பின் வேறு எதுபற்றிப் பேசினார்?

சுந்தரம்: அவரே சொன்னார், அவைகளைப் பற்றிப் பேச வரவில்லை, எல்லோர்க்கும் பொதுவான --- எல்லோரும் கட்டாயமாக அறிந்துகொள்ள வேண்டிய --- ஒரு விஷயம் பற்றியே பேசப் போகிறேன் என்று சொன்னார்.