பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

 கமலம்: அது என்ன கட்டாயமாக அறிய வேண்டிய விஷயம்? விளங்கவில்லையே.

சுந்தரம்: ஒவ்வொரு குடும்பத்தாரும் தாங்களும் தங்கள் குழந்தைகளும் சுகமாக சந்தோஷமாக வாழ வேண்டும், குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்க வேண்டும், நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

கமலம்: ஆமாம் அப்படித்தான் ஆசைப்படுகிறோம், அதற்காக அவர் என்ன சொன்னார்?

சுந்தரம்: ஆசைப்படுவதில் குற்றமில்லை, அவ்விதம் தான் ஆசைப்பட வேண்டும், ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டும் சிந்தித்துப் பார்ப்பதேயில்லை.

கமலம்: ஏன் சிந்திப்பதில்லை. சிந்தித்துத் தானே ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்கப் பாடுபடுகிறார்கள். பணம் இருந்தால்தானே சந்தோஷமாக வாழலாம், நல்லவிதமாகக் குழந்தைகளை வளர்க்கவும் படிப்பிக்கவும் முடியும்?

சுந்தரம்: ஆமாம் கமலம், அதையே தான் அந்தப் பெரியவரும் கூறினார். பணம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. ஆனால் ஒவ்வொருவரும் ஏராளமாகச் சம்பாதித்துவிட முடியாது. அவரவர் சக்திக்குத் தக்க படிதான் சம்பாதிக்க முடியும்.

கமலம்: அது என்னவோ உண்மைதான். பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் படிக்கிறார்கள், ஆனால் எல்லாப் பிள்ளைகளும் ஒரே மாதிரியாக மார்க்கு வாங்கிவிடுவதில்லை.

சுந்தரம்: அதனால் அந்தப் பெரியவர் என்ன சொல்லுகிறார் தெரியுமா? ஒவ்வொருவரும் தாம் எவ்வளவு சம்