பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பாதிக்க முடியும் என்று முதலில் யோசிக்க வேண்டும். பிறகு தாம் சம்பாதிப்பதைக்கொண்டு எத்தனை குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்க முடியும் என்று யோசிக்க வேண்டும் என்று கூறினார்.

கமலம்: ஆமாம் அது உண்மைதான். அதிக வருமானமில்லாவிட்டால் அதிகக் குழந்தைகளை வளர்க்க முடியாது தான். எதிர்த்த வீட்டு அண்ணாவுக்கு வருமானம் குறைவு, அதனால் ஆறு குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர் படுகிற பாடு கடவுளுக்குத்தான் தெரியும்.

சுந்தரம்: அந்தக் குழந்தைகளைப் பார்த்தால் எவ்வளவு பரிதாபமாயிருக்கிறது. நல்ல உணவில்லை, நல்ல உடையில்லை. எலும்பும் தோலுமாக இருக்கின்றன. எப்போது பார்த்தாலும் ஒன்று மாறி ஒன்றுக்கு நோய்; டாக்டர் ஆஸ்பத்திரியில் இல்லாத மருந்து ஏதாவது எழுதிக்கொடுத்தால் அதை வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

கமலம்: ஆமாம், ஆனால் அடுத்த விட்டு அண்ணாவுக்கும் அதே வருமானம் தான். ஆனால் மூன்று குழந்தைகளே யிருப்பதால், அவைகள் நன்றாக இருக்கின்றன. அழகான சட்டை, அழகான பாவாடை வாங்கிக் கொடுக்கிறார்கள். குழந்தைகள் செழிப்பாகக் கொழு கொழு என இருக்கின்றன. அவைகளை வாரி எடுத்து முத்தவேணும் போல் இருக்கிறது. நீங்கள் இல்லாத வேளையில் அவைகளைக் கூட்டி வைத்துத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

சுந்தரம்: இதைத்தான் அந்தப் பெரியவர் பல விதமாக எடுத்து விளக்கினார். நீ வரவில்லையே என்று தோன்றிற்று.