பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

 கமலம்: அப்படியானால் பெண்ணுக்குச் செய்யும் ஆப்பரேஷன் கஷ்டமானதோ?

சுந்தரம்: இல்லை, அதுவும் எளிதானது தான். ஆனால் ஆணுக்கு எந்த நேரமும் செய்யலாம். பெண்ணுக்கு என்றால் அவள் குழந்தை பிரசவிக்கும் பொழுதுதான் செய்வார்கள். அப்போது அவளுக்குக் கொஞ்சமும் நோயில்லாமலே செய்துவிடுவார்கள்.

கமலம் : அது சரி, அப்படியானால் அதற்காக அவள் எத்தனை நாள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும் ?

சுந்தரம் : குழந்தை பெற்றவள் ஏழெட்டு நாள் படுத்திருப்பாள் அல்லவா? அது போல் படுத்திருந்தால் போதும், ஆப்பரேஷன் செய்ததற்காக அதிக நாள் ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டியதில்லை.

கமலம் : இந்த ஆப்பரேஷன்கள் இவ்வளவு எளிதாக இருக்கும்போது ஏன் எல்லோரும் செய்யாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சுந்தரம் : இப்படி ஒருவர் வந்து எளிதாக விளக்கிச் சொன்னால்தானே தெரியும். அதோடு ஆப்பரேஷன் என்றவுடன் நீ பயப்பட்ட மாதிரி மற்றவர்களும் விஷயம் அறியாமல் பயப்படுவார்கள் அல்லவா ?

கமலம் : ஆனால் இப்போது நமக்கு விஷயம் விளங்கி விட்டதால் நாம் இந்த யோசனைப்படியே நடப்போம். அடுத்த பிரசவ சமயத்தில் ஆப்பரேஷன் நான் செய்து கொள்கிறேன்.

சுந்தரம் : அது வேண்டாம் கமலம், உனக்குக் குழந்தை உண்டானவுடனே நானே போய்ச் செய்து கொண்டு வருகிறேன். ஆண்கள் ஏன் பெண்களைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்று அந்தப் பெரியவர் கூறினார். அவர் கூறுவது சரிதானே.