பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கமலம் : சரி உங்கள் விருப்பம்போல் செய்யுங்கள், கடைசியாக அந்தப் பெரியவர் என்ன சொல்லி முடித்தார் ?

சுந்தரம் : அவர் மூன்று விஷயங்கள் கூறி அவற்றை எல்லோரும் மறக்காமல் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கமலம் : அந்த விஷயங்கள் என்ன ?

சுந்தரம் : முதலாவதாக ஒவ்வொருவரும் மூன்று குழந்தைகளுக்கு அதிகமாகப் பெறுவதில்லை என்று முடிவு செய்துகொள்ளவேண்டும். முடிவு செய்து கொண்டு அந்த முடிவுப்படியே நடப்பேன் என்று நாள் தோறும் மனத்தில் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று சொன்னார்.

கமலம் : ஆமாம். அப்படித்தான் செய்துகொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியம் என்று இப்போது விளங்குகிறது. அவர் அடுத்த விஷயம் என்ன சொன்னார் ?

சுந்தரம் : அடுத்த விஷயமா ? ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தால் மனைவி அடுத்த பிரசவத்துக்கு ஆஸ்பத்திரிக்குப் போய்விட வேண்டும். போனதும் டாக்டரிடம், எனக்கு இனிமேல் குழந்தை வேண்டாம் ஆப்பரேஷன் செய்துவிடுங்கள் ' என்று கூறவேண்டும். டாக்டர் குழந்தை பிறந்த மறுநாள் அல்லது அதற்கு மறுநாள் ஆப்பரேஷனை எவ்விதக் கஷ்டமுமில்லாமல் செய்துவிடுவார்.

கமலம்: அதைத்தான் நானும் சொன்னேன், நமக்கு சொர்ணமும் பொன்னியும் இருக்கிறார்கள், போதும். மூன்றாம் பிரசவத்துக்கு ஆஸ்பத்திரிக்கும் போய் ஆப்பரேஷன் செய்து கொள்வேன். ஆனால்