பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

 நீங்கள் செய்து கொள்வதாகச் சொல்லுகிறீர்கள், அதுவும் சரிதான்.

சுந்தரம்: அந்தப் பெரியவர் மூன்றாவது விஷயம் என்ன கூறினார் தெரியுமா? 'ஏற்கனவே மூன்று குழந்தைகளிருந்தால் கணவன் உடனே நாளையே ஆஸ்பத்திரிக்குப் போய் ஆப்பரேஷன் செய்து கொள்ள வேண்டும். ஒருநாள் கூடக் காலதாமதம் செய்யக் கூடாது, மெத்தனமாய் இருந்துவிடலாகாது என்று கூறினார்.

கமலம்: ஆமாம் அவர் கூறுவது சரிதான். என்றைக்குக் குழந்தை உண்டாகும், என்றைக்கு உண்டாகாது என்று எவராலும் கூற முடியாது அல்லவா?

சுந்தரம்: இந்த மூன்று விஷயங்களையும் எல்லோரும் ஞாபகத்தில் வைத்து நடந்தால் நாட்டுக்கு நன்மை உண்டாகும் என்று சொல்லித் தம்முடைய உரையை முடித்தார்.

கமலம்: அவர் கூறுவது முழுவதும் உண்மை; அதில் சந்தேகமே இல்லை.


இந்தியா சுதந்திரம் அடையுமுன் டக்கா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராயிருந்த ஸர் பிலிப் ஹார்ட்டாக் மனைவியார் (ஹார்ட்டாக் சீமாட்டி) இந்தியா பற்றி எழுதியுள்ளநூலில் கூறுவது :

குடும்பக் கட்டுப்பாடு செய்யாமல் குடும்பத்தின் செல்வ நிலையை உயர்த்த முடியாது என்று அறிந்து மக்களிடையே குடும்பக்கட்டுப்பாடு முறைகளைப் பரவச் செய்யும் அரசாங்கம் இந்த உலகத்தில் இந்திய அரசாங்கம் ஒன்றே.