பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

கிறீர்களோ, அதற்கு 280 நாட்களுக்கு முன் கருத்தரிக்க வேண்டும் என்று ஆகிறதல்லவா ?

வ. உ. சி : ஆமாம், அதனால் பங்குனியில்-வசந்த கால ஆரம்பத்தில் பிறக்க வேண்டுமானால் முந்தின ஆனி மாதம் கருப்பம் உண்டாகவேண்டும், அப்படித் தானே தம்பி!

நான் : ஆமாம், அதனால் பங்குனி முதல் ஆவணி வரை குழந்தை பிறக்கவேண்டுமானால் ஆனி முதல் கார்த்திகைவரை கருத்தரிக்க வேண்டும்.

வ. உ. சி : அதுசரி தம்பி, ஆனால் நான் கேட்பது அதுவல்ல. புரட்டாசி முதல் மாசிவரை மழைக் காலமும் பனிக்காலமும் ; அந்தக் காலத்தில் குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு வழி என்ன? அதை அல்லவோ அறிய விரும்புகிறேன்.

நான் : அதில் என்ன கஷ்டம் ? ஆனிமுதல் கார்த்திகை வரை கர்ப்பம் உண்டானால் நல்லது என்று கண்டோம் அல்லவா? அதனால் மார்கழி முதல் வைகாசி வரை கருப்பம் உண்டாகக் கூடாது, அவ்வளவுதானே.

வ. உ. சி : அது சரிதான் தம்பி! அந்த மாதங்களில் கருப்பம் உண்டாகாவிட்டால் மழை காலத்தில் குழந்தை பிறக்காது, அது தெரிகிறது. ஆனால் அந்த மாதங்களில் கருப்பம் உண்டாகாதிருப்பதற்கு வழி என்ன ? அந்த மாதங்களில் காதல் செய்யக் கூடாது என்று கூறுகிறீர்களா ?

நான் : அப்படிச் சொல்லவில்லை. சொன்னால் அது நடக்கக்கூடிய காரியமில்லை.

வ. உ. சி : பின் என்ன செய்யவேண்டும் என்று கூறுகிறீர்கள்?