பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுஆ ண் மை போ கா து

என்னிடம் வருகிறவர்களிடம் நான் மூன்று குழந்தைகள் பெற்றதும் ஆப்பரேஷன் செய்துகொள்ளுங்கள் என்று கூறுவது வழக்கம். சிலர் "நீங்கள் கூறுவது நியாயம்தான். மூன்று குழந்தைகள் போதும், இரண்டுகூடப் போதும் என்று சில வேளைகளில் தோன்றுகிறது. ஆனால் ஆப்பரேஷன் செய்துகொள்ளச் சொல்லுகிறீர்களே, ஆப்பரேஷன் செய்தால் குழந்தை பிறக்காது என்றால் ஆப்பரேஷனால் ஆண்மை போய் விடுமல்லவா ? அது உண்டாகாமல் இருப்பதற்காகக் காளைக்குக் காயடிக்கிறார்களே, தாங்கள் கூறும் ஆப்பரேஷனும் அது போன்றதுதானே ? என்று கேட்கிறார்கள்.

இவர்கள் நினைப்பது தவறு. நான் கூறும் ஆப்பரேஷனால் ஆண்மை போகாது, அத்துடன் நான் கூறும் ஆப்பரேஷன் வேறு, காயடிக்கும் ஆப்பரேஷன் வேறு. இரண்டையும் விளக்குகின்றேன்.

இந்தக் கேள்வியைக் கேட்பவர்கள் கருவுண்டாக்கும் சக்தியையே ஆண்மை என்று எண்ணுகிறார்கள். ஆனால் கருவுண்டாக்கும் சக்தி வேறு. ஆண்மைச் சக்தி வேறு. ஒருவனுடைய கோசம் குய்யத்துள் நுழையக் கூடிய அளவு கட்டியாக ஆகுமானால் அப்போதே அவன் கலவி செய்யமுடியும். அந்தக் கலவி செய்யும் சக்தியே ஆண்மைச் சக்தியாகும். சில கணவன்மார் கலவி செய்வார்கள், ஆயினும் அவர்களுடைய மனைவிமார்க்குக் கருவுண்டாகிக் குழந்தை பிறவாதிருக்கும்.