பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுகுடும்பக் கட்டுப்பாடு
ப ற் றி ய
சில முக்கியமான கேள்விகள்


மகாத்மா காந்தியடிகளும் போப்பாண்டவரும் குடும்பக் கட்டுப்பாடு வேண்டாம், குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கவேண்டாம் என்று கூறுவதாகச் சொல்லு கிறார்களே, அது உண்மைதானா ? எனச் சிலர் கேட்பர்.

போப்பாண்டவர் உலகத்திலுள்ள நாடுகள் அனைத்திலும் வாழ்ந்துவரும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு லோக குரு, மகாத்மா காந்தியடிகள் ஆங்கி லேயர்க்கு இருநூறு ஆண்டுகளாக அடிமையாயிருந்து அல்லலுற்ற இந்திய மக்களுக்கு விடுதலை தேடித்தந்த பாரத தேசத்தின் தனிப்பெரும் பிதா.

இவர்கள் இருவரும் குடும்பக் கட்டுப்பாடு வேண் டாம், பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளிக்கொண்டே இருக்கலாம் என்று கூறவில்லை. அதற்கு மாறாக அவர்கள் இருவரும் குடும்பக் கட்டுப்பாடு அவசியம் வேண்டும், அதிகக் குழந்தைகளைப் பெறலாகாது என்றே கூறுகிறார்கள். போப்பாண்டவர் உபதேசம் இது : பெற்ற குழந்தைகள் போதும் என்று எண்ணுகிறவர்கள் மீண்டும் குழந்தைகளைப் பெறாமல் இருப்பதற்காக இயற்கை முறைகளையே கையாளவேண்டும், செயற்கை முறை களைக் கையாளலாகாது. மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள மாத்திரைகளும் களிம்புகளும் கருவிகளும் செயற்கை முறைகள். இனிக் குழந்தைகள் வேண்டாம்