பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

யானால் குழந்தைகள் வேண்டாம் என்று எண்ணுகிறவர்கள் கருத்தரியா நாட்களில் காதல் செய்யட்டும், மற்ற நாட்களில் காதல் செய்யாதிருக்கட்டும் என்று கூறினார். ஆகவே காந்தியடிகளும் போப்பாண்டவரைப் போலவே குழந்தை பெறாமலிருப்பதற்காகக் (1) காதல் செய்யாதிருத்தல் என்னும் முறையையும், (2) கருத்தரிக்கும் நாட்களில் காதல் செய்யாதிருத்தல் என்னும் முறையையும் ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாகும்.

ஆகவே இந்த இரண்டு உலகப் பெரியார்களும் குடும்பக் கட்டுப்பாடு வேண்டாம் என்று கூறவில்லை. அதற்கு மாறாக அவர்கள் வேண்டும் என்றே கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் வழிகள் நான் கூறும் வழிகளுக்கு வேறானவை. அவ்வளவே.

(2) அப்படியானால் மருத்துவர்கள் கூறும் செயற்கை முறைகளை விட்டு விட்டு இயற்கை முறைகளைக் கையாளலாம் அல்லவா ? ஆப்பரேஷன் வேண்டாம் அல்லவா ? எனச் சிலர் கேட்பார்.

1952-ஆம் வருஷம் நவம்பர் மாதத்தில் பப்பாய் நகரத்தில் சர்வதேசக் குடும்பக் கட்டுபாட்டு மகாநாடு நடைபெற்றது. உலகம் புகழும் தத்துவ ஞானியும் பாரத தேசத்தின் ராஷ்டிரபதியுமான டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்கள் அந்த மகாநாட்டை. ஆரம்பித்து வைத்தார். அப்போது அவர் செய்த சொற்பொழிவில் செயற்கை முறைகள் வேண்டாம், இயற்கை முறைகள் தான் வேண்டும் என்று கூறுகிறவர்களுக்குத் தக்கவாறு பதில் கூறியுள்ளார். அவர் கூறுவதன் சாரம் இது :- நமக்குக் கடவுள் அறிவு கொடுத்திருப்பது நாம் அதைப் பயன்படுத்துவதற்காகவே, நாம் அறி