பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

காலம் சாதாரணமாக 28 நாட்களாயிருக்க வேண்டுமாயினும் எல்லோருக்கும் அப்படி யிருப்பதில்லை. ஒரு பெண்ணுக்கே கூட சில சமயங்களில் 23-ஆம் நாளும் சில சமயங்களில் 33-ஆம் நாளும் வருவதுண்டு. ஆதலால் மாதவிடாய் கண்டு 10- ஆம் நாள் முதல் 19-ஆம் நாள் வரைக் காதல் செய்யாதிருந்தால் குழந்தை உண்டாகாது என்று கூறுகிறார்கள்.

ஆயினும் பெண்களின் தேகாரோக்கியத்தில் ஏற்படும் வேறுபாடுகளின் காரணமாகவும், உறுப்புக்களில் ஏற்படும் வேறுபாடுகளின் காரணமாகவும் மேற் சொன்ன கணக்குப்படி நடை பெறுவதில்லை. சில சமயங்களில் முட்டையானது சம்போக வேகத்தின் காரணமாகக் காலந் தவறி வெளியே வந்து விடுவதுமுண்டு.

ஆகவே இந்த முறையைக் கையாண்டால் அநேக மாகக் குழந்தை பிறக்காது என்று கூற முடியுமேயன்றி நிச்சயமாகக் குழந்தை பிறக்காது என்று கூற முடியாது.

அதனால் ஒரு குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் சென்ற பின்னரே மறுகுழந்தை பிறக்கவேண்டும், அடுத்தடுத்துப் பெறக் கூடாது என்று எண்ணுகிறவர்கள் மட்டுமே இந்த முறையைக் கையாளலாம். மூன்று குழந்தைகள் உடையவர்கள், இனிக் குழந்தை வேண்டாம் என்று எண்ணுகிறவர்கள் இந்த முறையைக் கையாளலாகாது. ஆப்பரேஷன் முறை மட்டுமே முற்றிலும் நம்பக்கூடியது, அதனால்தான் அந்த முறையைக் கையாண்டு நலம் பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

(4) மருத்துவர்கள் ஒருவித மாத்திரை கண்டு பிடித்திருக்கிறார்கள், அதை மூன்று நாட்கள் சாப்பிட்