பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சென்னை மாநில முதலமைச்சர்

கனம் எம். பக்தவத்சலம்

முகவுரைஆப்பரேஷன் முறையினால் எவ்விதத் தீமையும் இல்லை என்பதற்கு ஆதாரச்சான்றுகள் தந்தும், இம்முறையினால் பெரும் நன்மை உண்டு என்பதை விளக்கியும் திரு. பொ. திருகூடசுந்தரம் அவர்கள் இச்சிறு நூலை எழுதியிருக்கிறார். ஆப்பரேஷன் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இது மிகவும் பயன்படத்தக்க பிரசுரம். தமிழ் மக்கள் இதைஏற்ற முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இப்பிரசுரத்தை வெளியிடும் ஸ்ரீபாபுஜி பதிப்பக உரிமையாளர் தொடர்ந்து மேலும் மேலும் இம்மாதிரியான மக்களுக்குப் பயன்படக்கூடிய நூல்களை வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். இவ்வெளியீட்டு உரிமையாளருக்கு என் நல் வாழ்த்துக்கள்.

எம். பக்தவத்சலம்