பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

 டால் காதல் செய்து வந்தாலும் மூன்று ஆண்டுகள் குழந்தை உண்டாகாது என்று கூறுகிறார்களே, ஆப்பரேஷன் செய்து கொள்ளாமல் அந்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடலாம் அல்லவா ? எனச் சிலர் கேட்பர்.

அந்த மாதிரியான மாத்திரைகள் இருப்பதாகத்தான் அடிக்கடி பத்திரிகையில் விளம்பரங்கள் வருகின்றன. ஆனால் விளம்பரங்களை நம்பி எதுவும் செய்துவிட லாகாது. அதுபோல் எந்த மருத்துவர் கூறுவதையும் கூட நம்பிவிடலாகாது. அந்த மாத்திரையை உண்டால் குழந்தை உண்டாகாது, அந்த மாத்திரைகளால் எந்தவிதத் தீங்கும் ஏற்படாது என்று அதிகார நிலைமையிலுள்ள மருத்துவ நிபுணர்கள் அபிப்பிராயம் கூறினால் மட்டுமே அந்த மாத்திரைகளை வாங்கிப் பயன் படுத்தலாம்.

மாத்திரையைச் சாப்பிட்டு மக்களைப் பெறாதிருக்க வழியிருக்குமானால் மிகவும் நல்லதுதான். அதை எண்ணி ஐம்பது வருட காலமாக எல்லா நாடுகளிலும் ஏராளமான மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சிகள் - நடத்தி வருகின்றனர். நம்முடைய நாட்டிலும் நடந்து வருகின்றது. ஆனால் இன்னும் அத்தகைய மாத்திரை எதுவும் கண்டுபிடிக்கவில்லை. கண்டு பிடித்திருந்தால் நம்முடைய அரசாங்கம் களிம்புகளையும் உறைகளையும் பயன்படுத்துமாறோ ஆப்பரேஷன் செய்து கொள்ளுமாறோ மக்களிடம் பிரசாரம் செய்யாமல், அந்த மாத்திரைகளையே ஆயிரக்கணக்காகச் செய்து நாடு முழுவதும் எளிதாகப் பரவச் செய்துவிடும்.

ஆதலால் மூன்று குழந்தை போதும் என்று எண்ணுகிறவர்கள் விளம்பரம் செய்யும் மாத்திரைகளை வாங்கவேண்டாம் என்றும் ஆப்பரேஷனையே செய்து