பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

கொள்ளவேண்டும் என்றும் வற்புறுத்திக் கூற விரும்புகின்றேன்.

(5) கருவிகள் களிம்புகள் ஆகியவற்றைக் கொண்டு குழந்தைகள் உண்டாவதைத் தடுத்துவிடலாம் என்று கூறுகிறார்களே, அப்படியிருக்க ஆப்பரேஷன் செய்யவேண்டும் என்று கூறுவதன் காரணம் யாது ? எனச் சிலர் கேட்பர்.

குழந்தைகள் உண்டாவதைத் தடுப்பதற்காகப் பலவிதமான கருவிகளையும் களிம்புகளையும் மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றை வாங்கி மக்கள் பயன்படுத்தவும் செய்கிறார்கள். எந்தவிதமான தீங்கும் செய்யாமல் குழந்தை உண்டாவதைத் தடுக்கக் கூடிய கருவிகளும் களிம்புகளும் உள்ளன.

ஆனால் அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதென்றால் அதிகப் பணம் செலவாகும். அதோடு அந்தப் பொருள்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கமாட்டா, பெரிய பட்டணங்களில் மட்டுமே கிடைக்கும். அவற்றை உபயோகிப்பதிலும் பலவித சிரமங்கள் உண்டு.

நம்முடைய நாட்டிலுள்ள மக்களுள் பெரும் பாலோர் ஏழைகள், கிராமங்களில் உள்ளவர்கள். அவர்கள் கருவிகளையும் களிம்புகளையும் வாங்கிப் பயன்படுத்த முடியாது. இதை மனத்தில் வைத்துக்கொண்டு எல்லோரும் எளிதாகவும் பணச்செலவு இல்லாமலும் பயன்படுத்தக்கூடிய சாதனங்கள் பற்றி இந்த நூல் 21 ஆம் பக்கத்தில் கூறியுள்ளேன்.

இந்தச் சாதனங்களையும் அடுத்தடுத்துக் குழந்தை பெறாமலிருப்பதற்காக மட்டும் பயன்படுத்துவது நல்லது. மூன்று குழந்தைகள் பெற்ற பின்னர் மீண்டும்