உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

குழந்தைகளைப் பெறாமலிருப்பதற்கு இந்தச் சாதனங்களைப் பயன்படுத்தவேண்டாம். மூன்று குழந்தைகள் பெறு முன்னர் இந்தச் சாதனங்களை உபயோகிப்பவர் ஒரு தடவை உபயோகிக்கத் தவறினாலும் பாதகமில்லை. ஆனால் மூன்று குழந்தைகள் உள்ளவர்கள் ஒரு தடவை தவறினாலும் அந்தத் தடவை கருத்தரித்துவிடலாம். அது அவர் விருப்பத்துக்கு மாறாக நடைபெறும் காரிய மாகும். ஆதலால் மூன்று குழந்தைகள் போதும் என்று எண்ணுகிறவர்கள் ஆப்பரேஷனே செய்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு மீண்டும் குழந்தைகள் உண்டாகவே செய்யாது.

ஆகவே மூன்று குழந்தைகள் போதும் என்று எண்ணுகிறவர்கள் அந்த மூன்று குழந்தைகளையும் அடுத்தடுத்துப் பெறாமலிருப்பதற்காக நான் 21-ஆம் பக்கத்தில் சொல்லும் முறையைக் கையாளுங்கள்.

ஆனால் மூன்று குழந்தைகள் பெற்ற பின்னர் மீண்டும் குழந்தைகள் உண்டாகாமலிருப்பதற்காக ஆப்பரேஷனே செய்துகொள்ளுங்கள்.

(6) ஆப்பரேஷன் செய்த பின்னர் குழந்தைகள் வேண்டும் என்று தேவைப்பட்டால், ஆப்பரேஷனை மாற்றியமைத்துக் குழந்தைகள் பெறமுடியுமா என்று சிலர் கேட்பர். அதுவும் முடியக்கூடிய காரியமே. குழந்தைகள் உண்டாகாமலிருப்பதற்காகச் செய்யும் ஆப்பரேஷனை மாற்றி அமைக்கமுடியும். அதற்கான முறையையும் மருத்துவ நிபுணர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். அதை பிளாஸ்டிக் அறுவை மருத்துவ முறை என்று கூறுவார்கள். சென்னை ஜெனரல் மருத்துவ இல்லத்தில் அந்த முறை ஆப்பரேஷன் செய்யக் கூடிய நிபுணர் உள்ளனர்.