பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆப்பரேஷனுக்கு அஞ்ச வேண்டாம்

மனிதன் எந்தச் சிறு காரியமானாலும் திட்டமிட்டே செய்வான். திட்டமிடாமல் செய்யும் காரியம் எதுவும் திருப்தியாய் முடிவதில்லை. முன்கூட்டிச் சிந்தியாமல் செய்தால் வெற்றி பெற முடியாது. தோல்வியே உண்டாகும். அதற்காகவே தமிழ் மக்களுக்குத் தனிப்பெரு வழிகாட்டியாகவுள்ள வள்ளுவர்,

எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

என்று எப்போதும் எச்சரித்து வருகின்றார்.

ஆனால் மனிதன் நல்வாழ்விற்காகச் செய்யும் காரியங்களில் எல்லாம் அஸ்திவாரமாகவுள்ள காரியம் ஒன்று உள்ளது. மனிதன் அல்லும் பகலும் உழைப்ப தெல்லாம் தன்னுடைய மனைவியும் மக்களும் சுகமாக வாழவேண்டும் என்பதற்காகவே. ஆனால் அதற்குரிய வழியை மட்டும் ஆராய்ந்து காண்பதில்லை. ஆராய்ந்து கண்டாலும் அதை மேற்கொள்வதில்லை. பிறர் ஆராய்ந்து சொன்னாலும் அதைக் கவனிப்பதில்லை.

மனிதன் மணந்து மக்களைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவே விரும்புகின்றான். ஆனால் எவனும் ஒரு பெண்ணை மனைவியாக மணக்கும்போதும் மணந்த பின்னரும் அவனும் அவனுடைய மனைவியும் “மணந்து கொண்டோம். மக்கள் பெறுவோம். ஆனால் எப்போது குழந்தை உண்டாக வேண்டும் ? ஒரு குழந்தை பெற்ற பின் எத்தனை ஆண்டுகள் கழித்து