பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6
ஆபுத்திரன்

படுத்தலால் யாது பயன்’ எனக்கருதி, இதுகாறும் உங்களுக்குச் சொல்லாதிருந்தேன்; அசுத்தனாதலால் இவனைத் தீண்டாது நீங்குங்கள்" என்று சொன்னான்.

ஆபுத்திரன் அதுகேட்டு, ”முனி சிரேஷ்டர்களாகிய அகஸ்தியரும் வசிஷ்டரும் தேவகணிகையாகிய திலோத்தமையின் புத்திரர்கள் என்பதனை அறியீர்களோ ? சாலிக்குத் தவறுகூறத் துணிந்தீர்களே' என்றுகூறி, அவர்களை நோக்கி நகைத்தான்.

வளர்த்த பூதி அந்தணனும் அவனைப் புலைமகளென்று தன் அகத்துக்கு வரவொட்டாது தடுத்துவிட்டான். பின்னர் ஆபுத்திரன், ஆதரிப்பார் ஒருவருமின்றி, இரந்துண்டு காலங்கழிக்கக்கருதி, பிச்சைப் பாத்திரத்தைக் கையிலேந்தி, வீடுகள் தோறுஞ் சென்றான். அவனே அந்தணர்கள் 'பசுவைத் திருடின கள்வன்' என்று இகழ்ந்து, தங்கள் ஊர்களில் எல்லாம் அன்னம் இடாமல் பிச்சைப் பாத்திரத்தில் கல்லைப்போடத் தொடங்கினர்கள். அதனல், அவன் வேறு புகலின்றிப் பாண்டியரது இராஜதானியாகிய மதுரையம்பதியை அடைந்து, ஆங்குள்ள சிந்தாதேவியின் (சரஸ்வதி) கோயிலாகிய கலைநியமத்தின் எதிரேயுள்ள அம்பலப் பீடிகையைச் (பொதுநிலையம்) சேர்ந்து, அதனையே தனக்கு உறைவிடமாகக்கொண்டு, கையிற் பிச்சைப்பாத்திரமேந்தி, இல்லங்கள் தோறும் சென்று சென்று, வாங்கி வந்த உணவை, அவ்வம்பலத்தில் அமர்ந்து “எ! அந்தகர்களே! முடவர்களே! அகதிகளே! நோயாளிகளே யாவரும் வம்மின், வம்மின்” என இரக்கத்துடன் கூவி அழைத்து, அவர்களை அன்புடன் உண்பித்து, எஞ்சிய மிச்சத்தையே தானுண்டு, பிச்சைப் பாத்திரத்தைத் தலையணையாக வைத்