ஆபுத்திரன்
9
மழை பெய்வித்து மிக்க செல்வத்தை உண்டாக்கினான். அதனால் பன்னிரண்டு வருடம் பஞ்சத்தால் வருந்திய பாண்டிய நாடு, மழைவள மிகுந்து மாநிலஞ்செழித்தது. ஆகவே பசித்துவருவோர் இல்லாமல் அம்பலம் ஊனுண்னும் ஒலி அடங்கி, துஷ்டரும் கெட்ட ஒழுக்கமுடையவர்களும் விகட புத்தியுள்ளவர்களும் பிரயாணிகளும் கூடி, வட்டும், சூதும், வம்பும் ஆடுதற்குரிய இடமாய்விட்டது. அதுகண்டு, ஆபுத்திரன் அம்பலத்தை விட்டு நீங்கி, ஊர்தோறுஞ் சென்று சென்று, "உண்போர் யாரேனும் உண்டோ?" என்று வினாவத் தொடங்கினான். அதுதெரிந்து, செல்வக்களிப்பால் இறுமாப்புற்றோர் யாவரும் இவன்யார் பித்தன்?’ என்று இகழத்தொடங்கினார்கள். அதனால் ஆபுத்திரன், பெருஞ் செல்வத்தைக் கடலில் கவிழ்த்தவன்போல வருந்தித் தனியே செல்லுகையில், மரக்கலத்திலிருந்து இறங்கிவந்த பிரயாணிகள் சிலர், வழியிடையில் அவனைக்கண்டு, வணங்கி, "சாவகநாடு மழையின்றி மிக்க வறுமையுற்று உயிர்கள் பசியால் வருந்தி மடிகின்றன. நீ அங்கு செல்லுதல் நலம்" என்று கூறினார்கள். அதுகேட்டு, அவன், நீரில் வீழ்ந்து ஆழுவோரை எடுக்கப்போவார்போல் விரைந்து சென்று, தேச சஞ்சாரிகளோடு சாவகத்தீவுக்குச் செல்லும் மாக்கலத்தில் ஏறினான், கலமும் பாய்விரித்துப் புறப்பட்டுச் சென்றது. சிலகாத துாரம் சென்றதும் கடலானது காற்றினல் கொந்தளிப்பாயிருந்தமையால் சென்ற கப்பல், பாய் இறக்கி, மணி பல்லவம் என்னும் தீவினருகில் ஒருநாள் தங்கியது.
ஆபுத்திரன் அத்தீவின் காட்சியைக் கண்ணுற்றுக் களிக்க இறங்கினன்; இறங்கின அவன், ஏறிவிட்டான் என்று மாலுமி எண்ணிக் கப்பலே இருட்காலத்தில் செலுத்திக்கொண்டு போய்விட்டான். அது தெரிந்த ஆபுத்திரன்