பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ஆபுத்திரன்


"அந்தோ! நான் எண்ணியபடி சாவகாடு செல்லுதற்கு இயலாது போய்விட்டதே என்செய்வேன்" எனப் பலவாறு கவன்று, "இவ்வமுத சுரபியை அடைவதற்கு முற்பிறப்பில் நல்வினை செய்த நான் சிறிது தீவினையும் செய்தேன்போலும்; அதனாலேதான் தனித்துத் துயருழக்கின்றேன்" என வருந்திக்கூறிப் பின்னரும் "பல உயிரைப் பாதுகாத்தற்குரிய இப்பாத்திரத்தை, வானேர் பாற்கடல் தந்த அமுதைத் தாங்களே உண்டு, ஒழிந்த மிச்சத்தை யொளித்து வைத்ததுபோல் வைத்துக்கொண்டு, என்னுயிரை மாத்திரம் பாதுகாத்து, ஒருவருமில்லாத இத்தீவத்தில் நான் இரேன்" என்று சொல்லி, அப்பாத்திரத்தைத் தொழுது, "வருடத்திற்கு ஒரு முறை நீ வெளித் தோன்றுவாயாக" என்று கூறி, அத்தீவிலுள்ள கோமுகி என்னும் பொய்கையுள்ளே விடுபவன், அதனை நோக்கி, "தயாதர்ம முடையோராய்ப் பல உயிர்களையும் பாதுகாக்கும் ஈற்குணமுடையவர் எவரேனும்வரின் அவர் கையிற் புகுவாயாக" என்று சொல்லி, அப்பொய்கையில் விட்டான். அமிழ்த சுரபியும் அமிழ்ந்தியது. ஆபுத்திரன், உண்ணா நோன்பு பூண்டு மணிபல்லவத்திலே சில நாளிருந்து, அங்குவந்த அறவணவடிகள் என்னும் பெளத்தமத ஆசிரியரைத் தரிசித்து, நிகழ்ந்தவற்றைக் கூறிவிட்டு, உயிர்துறந்து குடதிசைச் சூரியன்போல் மறைந்தான்.

முன்பு ஆபுத்திரனுக்கு ஏழுநாள் வரையும் பாலூட்டி வளர்த்த நற்பசுவானது அப்புண்ணியப் பயனால், சாவக நாட்டில் தவள மலையில் தவஞ்செய்து கொண்டிருக்கும் மண்முகமுனிவனிடத்தில் பொன்மயமான கொம்புகளையும் குளம்புகளையும் உடையதாய்ச் சென்று, கன்றீனு முன்னமே பால் சுரந்து, எல்லா உயிர்களையும் ஊட்டிக்கொண்