உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆபுத்திரன்.

11

டிருந்தது. அதனைக்கண்டு, முக்கால நிகழ்ச்சிகளையும் அறியவல்ல அம்முனிவரன், இப்பசு வயிற்றில் உலகத்தில் மழைவளஞ் சுரக்கவும், மன்னுயிரைக் காக்கவும் ஒரு விசேட புருடன், குடலின் சம்பந்தமின்றிப் பொன்மயமான முட்டையில் தோன்றுவான்" என்று கூறினன்.

இஃது இங்ஙனமாக; முன் மணிபல்லவத்தில் உயிர் விட்ட ஆபுத்திரன், சாவகநாடு சென்று தருமஞ்செய்ய வேண்டுமென்ற சிந்தனையோடு, தன்னைக் குழந்தைப் பருவத்தில் பாலூட்டிக் காத்த பசுவை நினைந்து கொண்டே உயிர் துறந்தானாதலின்; மண்முகமுனிவன் கூறியவாறே சாவகநாட்டில் அவ்விசேட பசுவின் திருவயிற்றில் உலகுய்யத்தோன்றி, உதய சூரியன்போல் உதித்தனன. அவன் உதித்தகாலம் புத்தன் திருவவதார காலமாகிய வைகாசி மாதத்துச் சுத்த பூர்ணமைத் திதியாகும். அவன் உதிக்க அம்முகூர்த்தத்தில், சூரியனும் சந்திரனும் தீமையுருமல் ஒளிமிகுந்து விளங்கின; நக்ஷத்திரங்கள் நன்னெறியிலே இயங்கின; வானம் பொய்யாது மழை பெய்தது: நிலமுழுதும் செழித்து விளங்கின; உயிர்களெல்லாம் துன்பமின்றி வாழ்ந்தன; காற்று வலஞ்சுற்றி வீசிற்று; திசைகள் எல்லாம் சிறந்து தோன்றின: கடல் வளமிகுந்தன; புலியும் பசுவும் ஒரு துறையில் நீர் பருகின; கிளியும் பருந்தும் ஒரு கூண்டில் உறைந்தன; கூன், குருடு, செவிடு முதலிய அங்க ஈனர்கள் பூமியில் பிறவாதிருந்தனர்; பசுக்கள் கன்றுகளே ஊட்டிக் கலங்கள் ததும்பப் பாலைச்சொரிந்தன; பறவைகள் அயல்நாடு செல்லாது தத்தம் இருப்பிடங்களிலேயே இரையுண்டு உறைந்தன. இந்நல் நிமித்தங்கள் அனைத்தும் உலக முழுவதும் நிகழ்ந்தன. சக்கரவாளக்கோட்டம் முதலான இடங்களிலுள்ள முனிவர்கள், "இந்நிமித்த நிகழ்ச்சிக்குக்