பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஆபுத்திரன்

காரணமான ஒர் உத்தமபுருஷன் உலகினில் அவதரித்திருக்க வேண்டுமே; அவன் யாரோ தெரியவில்லையே” எனத் தங்களுள் ஆலோசித்து, வருங்காரியத்தை உரைக்கவல்ல கந்திற்பாவை (தூணில் கிற்கும்பாவை)யிடம் சென்று வினவினர்கள். அது, "மணிபல்லவத்தில் இறந்த ஒரு புண்ணிய புருஷன், உயிர்களைப் பாதுகாப்பதற்குச் சாவககாட்டிலுதித்தான்; அதனாலேதான் இந்த நன்னிமித்தங்கள் உண்டாயின. அவன் வரலாற்றை அறவனவடிகளிடம் கேட்டறியுங்கள்" என்று சொல்லியது. அவர்களும் அவ்வாறே கேட்டு வியந்திருந்தார்கள்.

இங்ஙனம் விநோதமாக அவதரித்திருந்த குழந்தையைச் சாவககாட்டு நாகபுரத்தரசன் பூமிசந்திரன் என்பான் அறிந்து, தனக்குப் பிள்ளைப்பேறு இல்லாததினுல் மணமுக முனிவரை அடைந்து வணங்கி இரந்து, அக்குழந்தையைப் பெற்றுக்கொண்டுபோய், புண்ணியராஜன் எனப் பெயரிட்டு வளர்த்தான். புண்ணியராஜனும் அரசர்க்குரிய கலைகள் பலவற்றையும் கற்றுப் பின்பு அரசுரிமை பெற்றுப் பூமியை ஆளத்தொடங்கினன். அது முதல் மழை பொய்யாத பெய்தது. மண்னும் மரமும் வளம்பல தந்தன. உயிர்கள் நோயின்றிச் சுகமுற்றன.

இவ்வாறு ஆபுத்திரன், புண்ணிய ராஜன் என்னும் பெயருடன் சாவக நாட்டில் அரசு செலுத்திக்கொண்டிருக்கும் நாளில், சோழவள நாட்டிலே காவேரி ஆறு கடலோடு கலக்கும் சங்கமுகத்துறையிலேயுள்ள சோழரது ராஜதானியாகிய காவிரிப்பூம்பட்டினத்திலே கோவலன் என்னும் வணிகர் குலதிலகனுக்கு, மாதவி யென்னும் நாடகக் கணிகை வயிற்றிற் பிறந்த 'மணிமேகலை’ என்னும் கன்னிகை, தன் தந்தையாகிய கோவலன் மதுரையில் பாண்-