பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆபுத்திரன்

15

அங்ஙனம் புலம்பிக்கொண்டிருப்பவள் முன்னர், இந்திரனால் இடப்பெற்றதும் பழம்பிறப்பை உணர்த்துவதுமான புத்தபீடிகை அவள் கண்ணுக்குத் தோன்றியது. தோன்றவும் மணிமேகலை ஆச்சரியங்கொண்டு பரவசமாகிக் கரங்கள் தலைமேற்குவிய, ஆநந்தக்கண்ணிர் சொரிந்து, பீடிகையை மும்முறை வலம்வந்து தொழுது, தன் பழம் பிறப்பு நிகழ்ச்சிகளையும் தெய்வம் தன்னை அங்கு தூக்கிக் கொண்டு வந்ததையும் உணர்ந்து, அத்தெய்வத்தின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பொது மணிமேகலா தெய்வம், மணிமேகலையின் பக்குவத்தை அறிந்து, ஆகாயத்தினின்றும் இறங்கிவந்து, அவளுக்கு முற்பிறப்பில் கண்வனாயிருந்த இராகுலன் வரலாற்றையும் அவனே இப்போது உதயகுமாரனாய்ப் பிறந்திருக்கிறான் என்பதையும் கூறிப் பின்பு ஆகாயவழியே சஞ்சரிக்கச் செய்வதும், உணவின்றி யிருக்கச்செய்வதும், வேற்று வடிவம் அளிப்பதுமாகிய மந்திரங்கள் மூன்றை அவளுக்கு உபதேசித்து விட்டுச் சென்றது.

அப்பால் மணிமேகலை அத்தீவிலுள்ள மணற்குன்றுகளையும், பொய்கைகளையும், பூஞ்சோலைகளையும் பார்த்துக்கொண்டே உலாவிவருகையில் பெண் ஒருத்தி எதிர்ப்பட்டாள். எதிர்ப்பட்டவள், மணிமேகலையை நோக்கி, "மிக்க துயரத்தோடு தனியே திரியும் நீ யார்"? என்று கேட்டாள். அதற்கு மணிமேகலை தன்னுடைய சென்ற பிறப்பின் செய்திகளையும், இப்பிறப்பின் வரலாற்றையும் கூறி, 'உன் வரலாறு யாது’ எனக்கேட்டாள். அவள் "இத்தீவிற்கு அயலிலுள்ள இரத்தின தீவத்திலே மிகவுயர்ந்து விளங்கும் சமந்தகூட மலையின் உச்சியிலேயுள்ள புத்ததேவரது பாதபங்கயங்களைத் தரிசித்துவிட்டு இத்தீ-