உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆபுத்திரன்

19

சும்மா வைத்திருத்தல் தகுதியன்று” என்று சொன்னார். உடனே மணிமேகலை பிக்குணிக் (சந்நியாசினி) கோலம் பூண்டு, பிச்சைப் பாத்திரத்தைக் கையிலேந்திக்கொண்டு, கண்டோர் யாவரும், ஆச்சரியமும், துக்கமும் கொள்ளும்படி வீதியை அடைந்தாள்.

அடைந்த மணிமேகலை, “முதல் முதல் கற்புடைய மாதர் இடும் பிச்சையையே ஏற்றுக்கொள்ளுதல் தகுதி” என்று கருதி, அந்நிய நாட்டுக்குச் சென்றிருந்த தன் கணவன், 'இறந்து போனான்' என்று பிறர் தவறாகக்கூறிய செய்தியைக் கேட்ட அளவிலே, தீக்குழியில் பாய்ந்த தீயால் சுடப்படாதவளாய் எழுந்த ஆதிரை என்பவள் வீட்டில் புகுந்து பிச்சையிடப்பெற்றாள். பிச்சைப் பாத்திரத்தில் சோறு எடுக்க எடுக்கக் குறையாது வளர்ந்து, வந்தோரது பசியைப் போக்கி விளங்கிற்று. விருச்சிகன் என்னும் முனிவர் உண்ணுதற்கு வைத்திருந்த காவல் கனியை மிதித்துக் கெடுத்த குற்றத்திற்காக அவரால் சபிக்கப்பட்டுத் தீராப் பசியாகிய யானைத்தீ என்னும் நோயை அடைந்த காயசண்டிகையென்னும் வித்தியாதர மங்கையும் இப்பாத்திரத்திலிருந்து ஒரு பிடி அன்னம் வாங்கி உண்ட அளவில் நோய் நீங்கிச் சுகமுற்றாள். பின்னும் மணிமேகலை இப்பாத்திரத்தைக்கொண்டு பல விசேட நிகழ்ச்சிகளைக் காவிரிப்பூம்பட்டினத்தில் நிகழ்த்திவிட்டு, அமுதசுரபிக்குரியவனாகிய ஆபுத்திரனைக் கண்டு, புத்த பீடிகையைத் தரிசிக்கச்செய்து, அவனுக்கு அவனது பழம்பிறப்பை உணர்த்தி, நல்வழிப் படுத்தக் கருதினாள். அதனால் அவள், அறவணவடிகள், மாதவி, சுதமதி இவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, ஆகாயவழியே சென்று, சாவக நாட்டில் புண்ணியராஜனது நகர்ப்புறத்தில் ஒரு சோலையை அடைந்து, அங்குள்ள