பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

ஆபுத்திரன்

ஒரு முனிவனை வணங்கி, "இந்நகரின் பெயர் யாது? இதனை ஆளும் மன்னவன் யார்"? என்று வினவினாள். அம்முனிவன், "இந்நகரின் நாமம் நாகபுரம் என்பது. இதனை ஆள்பவன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணியராஜன். இவன் பிறந்த நாள்தொட்டு இந்நாட்டில் மழைவளம் குறைந்ததில்லை. பூமியும் மரமும் பலபலன்களைச் சுரந்தளிக்கின்றன. உயிர்கள் நோயின்றிச் சுகமாய் வாழ்கின்றன” என்று அவ்வரசன் பெருமை முதலியவற்றை அவளுக்கு விளங்க விரித்துக் கூறினான்.

இச்சமயத்தில் புண்ணியராஜன், தன் பட்டத்துத் தேவியோடு அச்சோலைக்கு வந்து, ஆங்குள்ள தருமசாவகன் என்னும் முனிபுங்கவரை வணங்கித் தருமோபதேசங் கேட்டு, அங்கிருந்தான், அவன், முனிவர் அருகிலிருக்கும் மணிமேகலையை நோக்கி, "ஒப்பற்ற பேரழகினள், கையிற் பிச்சைப்பாத்திர முடையவளாய் அறவுரை கேட்கின்றாள்; இவள் யார்?" என்று வினவினான். அதற்கு அருகே நின்ற சட்டையிட்ட பிரதானி, அரசனை வணங்கி, "இந் நாவலந் தீவில் இங்நங்கையை ஒப்பார் யாருமில்லை; முன்னொரு காலத்தில் கிள்ளிவளவனுேடு நட்புச்செய்யக் கருதிக் காவிரிப்பூம்பட்டினத்துக்கு நான் தூது சென்றிருந்த காலத்தில் அங்கேயுள்ள அறவணவடிகள் என்பார், இவள் வரலாற்றை விளங்கக் கூறினர், என்று முன்னமே உரைத்திருந்தேனல்லவா? அவளே இவள்" என்று கூறினன். கூறலும் மணிமேகலை அரசனே நோக்கி, “அரசே! உன் கையிலிருந்த பிச்சைப் பாத்திரமே இது, இப்போது என்கையிற் புகுந்தது; செல்வக்களிப்பால் தெரியாது மயங்கினைபோலும், சென்ற பிறப்பையும், இப்பிறப்பையும் நீ அறிந்திலை; என் செய்தனை! மணிபல்லவஞ் சென்று புத்த பீடிகையை வலங்-