பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆபுத்திரன்

25

கொடுத்தாள்; அவனும் மகிழ்ச்சியுடன் குழந்தையை தாங்கிக்கொண்டு, கப்பலைச் செலுத்தி வருங்கால், இடை வழியில் கப்பல் உடைந்து போயிற்று; பலர் மாண்டனர்; தப்பிப்பிழைத்தோர் சிலர், காவிரிப்பூம்பட்டினம் வந்து, குழந்தையைப் பீலிவளை, செட்டியிடம் ஒப்புவித்ததும், கப்பல் உடைந்ததுமான செய்தியைச் சொல்லினர் அரசன் மிக்க வருத்தமுற்றுக் கடற்கரை ஓரமெல்லாம் ஓடித் தேடித்திரிந்தான்; இங்ஙனம் தேடித்திரிந்தமையால், இந்திரவிழாச் செய்யவேண்டிய நாளில் செய்யப்படாமல் போயிற்று; போகவே மணிமேகலா தெய்வம் சபித்தமையால், கடல் பொங்கிவந்து புகார் நகரமாகிய நிலப்பரப்பை நீர்ப்பரப்பாக்கிவிட்டது; அரசன் முதலானவர்கள் வேறிடம் சென்றனர்; அறவணவடிகளோடு உனது தாய் மாதவியும், சுதமதியும் யாதொரு வருத்தமுமின்றிச் சேரனது நகரமாகிய வஞ்சிமாநகரம் புகுத்தனர்; இனி நீயும் வஞ்சி மாநகரம் செல்வாயாக’ என் சொல்லிப் போய்விட்டாள்.

இவற்றையெல்லாம் கேட்டு வஞ்சிமாநகரம் செல்லக் கருதிய மணிமேகலை, பழைய உடம்பின் எலும்பைக் கண்டு மயங்கிய ஆபுத்திரனுக்குச் சிறந்த அறநெறியை உபதேசித்துத் தேற்றி, அவனை அவனது நகரத்துக்குச் செல்லும்படி சொல்லிவிட்டுத் தான் ஆகாய கமனமந்திரத்தை ஜெபித்துக்கொண்டு மேலெழுத்து சென்றாள். சென்றவள், வஞ்சிமாநகரத்தின் பக்கத்தில் இறங்கித் தன் பெரிய தாயாகிய கண்ணகிதேவியின் பத்தினிக் கோயிலை அடைந்து,வணங்கித் தொழுது வஞ்சிமாநகருள் புகுந்தாள். அங்கு பல மதவாதிகளோடு பல மதங்களைப்பற்றி விசாரித்தறிந்து கொண்டு, தன் தாய் மாதவியும்,சுதமதியும் அறவணவடிகளும் காஞ்சிமா நகரம் சென்றிருப்பதைத் தெரிந்து,