பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

ஆபுத்திரன்

அங்கு சென்று, அந்நகரத்தின் பஞ்சத்தை அக்ஷயபாத்திரத்தால் நீக்கிவிட்டு அறவணவடிகளைக் கண்டாள். அவர் அவளுக்கு பெளத்த தருமத்தை உபதேசித்தார்.

அவள் அவ்வுபதேசங்களைக் கேட்டுப் "பிறவித்துன்பம் ஒழிவதாக" என்று அந்நகரிலேயே தவம் செய்து கொண்டிருந்தாள். புண்ணியராசனாகிய ஆபுத்திரன் மணிபல்லவத்தினின்றும் மரக்கலம் ஏறிப் புறப்பட்டுச் சாவகநாடு (Java Island) சேர்ந்து, தன் நகரம் புகுந்து, சிலநாள் செங்கோல் செலுத்திக் கொண்டிருந்து, பழம்பிறப்பின் நிகழ்ச்சிகளை எண்ணி எண்ணி, மணிமேகலையின் உபதேசப்படி துறவற புகுந்த, பின்னர் நிருவாணம் (முத்தி) அடைந்தான்.

ஆபுத்திரனா யவதரித்த அன்பினன்பின்
கோபுத் திரனாய்க் குலவியதும் - ஆபத்தில்
புண்ணியத்தின் நற்பயனுற் போந்ததே மாநிலத்தீர்
எண்ணுமின் செய்மினற மே,