பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

ஆபுத்திரன்

அங்ஙனம் புறப்பட்ட பார்ப்பனி, பல ஊர்களையுங் கடந்து வருகின்றவள் பாண்டியநாட்டுக் கொற்கை நகரத்துக்கருகிலுள்ள ஆயர் சேரிக்கு அருகில் வரும்பொழுது ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். பெற்ற அவள்,

"கடந்த ஞானியும் கடப்பரோ மக்கள்மேற் காதல்"

எனப் பெரியோர் கூறியிருக்கவும், தாய்க்குப் பிள்ளைகள் மீது உண்டாகும் இயற்கை அன்பும், இரக்கமும் ஒரு சிறிதும் இல்லாது, அக் குழந்தையை ஒரு தோட்டத்தில் போட்டு விட்டுக் குமரித் துறையை நாடி நீங்கினள். நீங்கவே அக்குழவி உணவு பெறாமையால் பசிமிகுந்து வருந்தி அழுதது. அச்சமயம் அத்தோட்டத்தின் பக்கத்தில் பசும்புல் மேய்ந்து நின்ற ஒரு பசுவானது, அக்குழந்தையின் அழுகை யொலியைக்கேட்டு, அருகில் வந்து, அதன் வருத்தம்தீர நாவால் நக்கித் தன் பால் மடி.யைக் குழந்தையின் வாயிலிட்டுப் பாலூட்டி, ஏழு நாள் வரையும் அப்புறம் இப்புறம் செல்லாது, அன்போடு பாதுகாத்துக் கொண்டிருந்தது.

அவ்விதமிருக்கையில், வயனங்கோடு என்னும் ஊரிலிருந்து தன் மனைவியோடு வழிவருகின்ற 'பூதி' என்னும் அந்தணன் ஒருவன் அக்குழந்தையின் அழுகை ஒலியைக் கேட்டுச்சென்று, யாருமின்றித் தனியே கிடக்கும் அதைக் கண்டு மிக்க துன்பத்தோடு கண்ணீர் உகுத்து, 'இவன் பசுமகன் அல்லன்; என்மகனே' என்று சொல்லி, வறியோர் புதையற்பொருள் பெற்றதுபோல் பெருமகிழ்வுபூண்டான்; பின்பு புத்திரசெல்வத்தை வழியிடையே கொடுத்து உதவிய இறைவன் திருவருளைச் சிந்தித்துத் தொழுது, அக்குழந்தையை எடுத்துத் தோள்மீது அணைத்து, உவகை