பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

ஆபுத்திரன்

கள், யாகப் பசுவைக் காணாது துணுக்குற்று, நாற்புறத்தும் தேடி அலைந்து, ஓரிடத்தில் அப்பசுபாலகனேப் பசுவோடு அகப்படுத்திக்கொண்டார்கள், பின்னர் அவர்கள், ஆபுத்திரன் கருத்தை அறியாமல், அவனே நோக்கிப், "புலைச்சிறுவா! இப்பசுவை இரவில் எதற்காகக் கவர்ந்து கொண்டு வந்தாய்?" நீ செய்த இத்தொழில் தீயதொழில் அல்லவா?’ எனப் பலவாறு வெறுத்துரைத்துக் கோலால் அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினர்கள். அப்பொழுது ஆபுத்திரனே அதிகமாக அடித்து வருத்தும் ஒர் அந்தண உபாத்தியாயனைப் பசு, தன் கொம்பால் குத்திக் குடரை வெளிப்படுத்திவிட்டுக் காட்டிற்குள் பாய்ந்து விரைந் தோடிவிட்டது.

பின்னும் அதிகமாக வருத்திய அவர்களை நோக்கி, ஆபுத்திரன், "வருத்தாதீர்கள்: யான் சொல்வகைக் கேளுங்கள்; நீங்கள் இப்பசுவை வருத்தத் துணிந்தீர்களே ! இது உங்களுக்கு யாது குற்றஞ் செய்தது? மேய்ச்சல் புலங்களில் தானாக வளர்ந்த புல்லைத்தின்று, உலகத்து மாந்தர்கட்கெல்லாம் தான் பிறந்த நாள் முதலாகச் சிறந்த தன் தீம்பாலை இளகிய மனத்தோடு சுரந்தளித்து உண்பிக்கும் இப்புண்ணிய ஜெந்துவாகிய பசுவுடன் உங்களுக்கு உண்டான பகை என்ன? பசுக்களைக் கொன்று ஆயிரம் வேள்வி செய்து அடையும் பயனை ஓர் உயிரையும் கொல்லாமையாகிய தருமத்தால் அடையலாமே! இச்செயலை நீங்கள் கடைப்பிடியீராயின் உங்களுக்கு அந்தணர் என்னும் பெயர் எவ்வாறு பொருந்தும்?" எனப் பலவிதமான நீதிகளைக் கூறி, அவர்களை அருள்வழியில் ஒழுகுமாறு செய்ய முயன்றான்.

அந்தணர்களோ, அவனது சொற்களுள் ஒன்றையுங் கேளாது, அவனே நோக்கி, "நீ வேதங்களைக் கற்றுணர்ந்தும்