பக்கம்:ஆப்பிள் பசி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலர் மாலையை அணிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.”

டாக்டர் ராமமூர்த்தி மாலையைச் சாமண்ணாவின் கழுத்தில் போட அங்கு கூடியிருந்தவர்கள் அத்தனை பேரும் பலத்த கரகோஷம் செய்தனர்.

டாக்டர் பேச்சை ஆமோதித்துப் பலரும் பேச, கடைசியில் சகுந்தலா கையை உயர்த்தினாள்.

“என் மகள் பேசணும்னு ஆசைப்படறா. அவளுக்கு நான் என்னைக்குமே எதுக்குமே தடை விதிச்சது கிடையாது” என்று சொல்ல, சகுந்தலா எழுந்து நின்றாள்.

சாமண்ணாவைக் கடைவிழியால் பார்த்தாள். பிறகு பேச்சை ஆரம்பிக்க, அவள் எதிரே இருந்த பாப்பாவின் கண்கள் சற்றே சுழன்றன.

பக்கத்தில் கோமளம், “பாப்பா! பாப்பா!” என்று உசுப்பினாள்.

பாப்பா நினைவில்லாமல் நாற்காலியிலிருந்து கீழே சரிந்து விட்டாள்.

‘ஆ’ என்று பல குரல்கள் எழுந்தன.

106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/105&oldid=1029735" இலிருந்து மீள்விக்கப்பட்டது