பக்கம்:ஆப்பிள் பசி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாப்பா மூர்ச்சையாகிச் சாய்கிறபோதே. குமாரசாமி அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார். “டாக்டர்! டாக்டர்” என்று வக்கீல் மாமி கோமளம் குரல் கொடுக்க, டாக்டர் ராமமூர்த்தி ஒரு டம்ளரைத் தவற விட்டுக் கொண்டு விரைந்து வந்தார்.

“எல்லோரும் தள்ளி நில்லுங்க; காத்து வேணும்” என்று சூழ்ந்து நின்ற கும்பலை விலக்கிக் கொண்டு வந்த டாக்டர், பாப்பாவின் கைநாடியைப் பார்த்துவிட்டு, “ஒண்ணுமில்லை. லேசான அதிர்ச்சிதான். கவலைப்படாதீங்க. வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் படுக்க வையுங்க. மருந்து அனுப்பறேன்'; சரியாயிடும்" என்றார்.

எதிர் வரிசையில் அமர்ந்திருந்த சாமண்ணா எழுந்து நின்று சற்றுத் தள்ளி நின்றபடியே கவனித்தானே தவிர முகத்தில் கவலையோ, பரபரப்போ , எந்தச் சலனமுமோ தெரியவில்லை.

“கொஞ்சம் இங்க வரேளா?” என்று கோமளம் கணவரை அழைக்க, “என்னாச்சு? என்னாச்சு?” என்று பதறிக் கொண்டு வந்தார் வக்கீல்.

“மயக்கமா விழுந்துட்டா! நான் இவலை பீட்டன்ல நம்மாத்துக்கு அழைச்சுண்டு போறேன். நீங்க மீட்டிங் முடிஞ்சதும் சீக்கிரம் வந்து சேருங்க” என்றாள் கோமளம்.

“சரி, சரி! போய் பீட்டனைத் திருப்பி அனுப்பு. வந்துடறேன்.”

இரட்டைக் குதிரை பீட்டன் ‘டக் டக்’கென்று முகப்பில்

107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/106&oldid=1029736" இலிருந்து மீள்விக்கப்பட்டது