பக்கம்:ஆப்பிள் பசி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமி கோடை மழை போலப் பொழிந்து நிற்க, சாமண்ணு வின் சர்வ நாடியும் ஒடுங்கிவிட்டது.

'மாமி மன்னிச்சூடுங்கோ! நீங்க இப்படிப் பேசுவேள்னு நான் எதிர்பார்க்கலை. என் போதாத காலம். நீங்க மனம் நொந்து பேசும்படி நேர்ந்துட்டது மாமி! உண்மையைச் சொல் றேன். -

  • . மனசெல்லாம் இங்கேயேதான் இருந்தது. ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். எங்கம்மா கடைசியா, எனக்குச் சொன்ன வார்த்தை. அது ஒரு லட்சுமணர் கோடு மாதிரி. அதுதான் என்னை இங்கே வரவிடாமல் தடுக்கிறது. பாப்பாவை வந்து பார்க்கலாம், ரெண்டு வார்த்தை இதமாப் பேசலாம்னு பலதடவை நினைச்சேன். ஆனாலும் என் மேலேயே எனக்கு நம்பிக்கை இல்லை மாமி! எங்கே ஒரு வார்த்தை பேசினுக் கூட மனசிலே பாசம் கிளை விட்டிருமோங்கற பயம் தான். அவளோட பார்வை பட்டாக் கூட என் மனசிலே அன்பு கனிஞ்சுடுமோன்னு ஒரு அச்சம். கனிஞ்சா ஒண்னும் தப்பில்லைதான். ஒத்துக்கறேன். ஆளு எனக்குத் தெரியாம மனசிலே அது வளர்ந்துண்டே போயிட்டால் அப்புறம் என் சத்தியம், உறுதி, அம்மாவுக்குக் கொடுத்த வாக்கு எல்லாம் என்ன ஆறது?’’

'இத பார்! சும்மா எதையாவது சொல்லித் தப்பிக்கப் பார்க்காதே சாமண்ணு! நீ என்ன சொன்னலும் அதை நான் , ஒப்புக்க முடியாது. நீ அவளைப் பார்த்திருக்கணும்; உன்னைத் தினமுமா வந்து பார்க்கச் சொன்ன? ஒரே ஒரு வாட்டி, ஒரு ரெண்டு நிமிஷம் மாமாவைப் பார்க்க வர்ற ஜாடையிலே இங்கே அவளை எட்டிப் பார்த்திருக்கலாமே!”

கோமளம் தன் கட்சியை விடர்மல் வற்புறுத்தினுள். 'ஒத்துக்கறேன் மாமி! ஒத்துக்கறேன். தப்புதான், அதை நான் செஞ்சிருக்கணும்தான். அதுக்குள்ளே 'புதிய நாடகம் போடணும்னு டாக்டர் சொல்லிட்டார். அந்த லட்சியத்துலே, ஆசையிலே எல்லாத்தையும் மறந்துட்டேன்.' . - -

'புது நாடகமா? டாக்டரா அப்படிச் சொன்னர்' "ஆமாம், நாடகக் கம்பெனி பங்குதாரர் ஆச்சே! புதுசு போடணும்னு சொல்லிட்டார். அதுக்காக எங்கெங்கேயோ அலஞ்சு புதுப்புது கதைகளா தேடிப் பிடிச்சுப் படிச்சுப் பார்க் கிருேம். ஒண்னும் நாடகத்துக்குச் சரிப்பட்டு வரலே, ராம மூர்த்தியோட பெண் சகுந்தல்ாவே பல புஸ்தகங்களைப் பார்க் கிரு! இதுசம்பந்தமா அவர் வீட்டுக்கும், என் வீட்டுக்குமா அலைஞ்சுண்டு இருந்துட்டேன்...'

தேருமளத்துக்குப் பொங்கி வந்தது. * இந்தா சாமண்ணு! பங்குதாரர், பங்கில்லாதார்னு எதை யேனும் சொல்லிண்டு நிக்காதே! அப்போ எங்க ஆத்துக்காரர் பங்குதாரர் இல்லையா?” . .

I f{}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/109&oldid=1027986" இலிருந்து மீள்விக்கப்பட்டது