பக்கம்:ஆப்பிள் பசி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஐயோ! இல்லைன்னு சொல்வேன? அவர்தான் செக்ரடரி க்சே!' - 'சாமு! இப்போ ஒரு சமாசாரத்தை உடைச்சுச் சொல்றேன் கேட்டுக்க! இந்த நாடகத்துக்கு நிதி திரட்டினர்களே, இதுலே டாக்டரும் பங்குதார் இல்லே, வக்கீல் மாமாவும் பங்குதார் இல்லே. இவா ரெண்டு பேரும் நிஜமாகவே பங்கு போட்ட வான்னு நினைச்சுண்டிருக்கியா?”

சாமண்ணுவுக்குச் சுரீர் என்றது. 'போடலியா மாமி? அப்ப டின்ன பின்னே யார் கொடுத்தா?”

"எங்க வீட்டுக்காரருக்காவது கொஞ்சம் மனசு உண்டு. டாக்டருக்கு அதுவும் கிடையாது. எச்சில் கையாலே காக்கா ஒட்ட மாட்டார். அப்படியே இவர்களெல்லாம் போட்டாலும் நூறு இருநூறுக்கு மேலே போட்டுட மாட்டா. புது டிராமா தொடங்கறதுன் ைசும்மாவா? ஆயிரக்கணக்கர்ப் பணம் வேணுமே! அவ்வளவு தொகையை ஒரேயடியா யார் தூக்கிக் கொடுப்பான்னு நினைச்சுப் பார்த்தர்யா?”

'இவா யாரும் கொடுக்கலியா?' என்று தணிந்த குரலில் வியந்தான். .

'ஒத்தை தம்பிடி கொடுக்கல்லே! நான் சொல்றது வெளி யிலே தெரிய வேணும். அத்தனை பணத்தையும் கொடுத்தது யார் தெரியுமோ? பாப்பாதான். ஆமாம்; நீ அலட்சியப்படுத் தறயே அதே பாப்பாதான்! ஏன் கொடுத்தா தெரியுமோ? உன்மேலே அவள் வச்சிருக்கிறஅபிமானத்தினலேகொடுத்தா. நீ நல்ல நடிகளுச்சே, முன்னுக்கு வரனுமேங்கற அக்கறையில கொடுத்தா. உன்னை அவ உயிருக்குயிரா நேசிக்கிரு. அதை நினைவிலே வச்சுக்கோ.' .

சாமண்ணு பிரமிப்பில் தோய்ந்தான். வெறும் பிரமிப்பு மட்டுமல்ல. ஒரு வேதனையை உணர்வதாகவும் இருந்தது. கை, கால் இயங்கவில்லை. கண் இமைக்கவில்லை. கோமளம் ஊஞ்ச லில் ஆசுவாசமாக அமர்ந்தாள். சற்று நேரம் அங்கே நிசப்தம் நிலவியது.

'சரி மாமி! இப்ப எல்லாம் புரியறது. நீங்க ஏன் என்னை அன்போடு கடிஞ்சீங்கன்னு இப்ப தெரியறது. உண்மை உங்க ளுக்குத் தெரிஞ்சிருக்கு. ஆன நீங்க அதை என்கிட்டே சொல்ல முடியாமத் தவிச்சிருக்கீங்க! இப்போ உங்களுக்கே பொறுக்க முடியாமப் போகவே உடைச்சு வெளியிலே விட்டுட்டீங்க. எனக்காக ஒரு ஜீவன் அன்பு காட்டறதும்பாடுபடறதும்இப்போ தெரிஞ்சுப் போச்சு! உங்களுக்கு கோடிக் கும்பிடு மாமி! இப்போதே போய் அவளைப் பார்க்கிறேன்.' -

'இரு இரு. அவசரப்படாதே! நான் சொன்ன விஷயம் யாருக்கும் தெரியப்படாது. பாப்பாவிடம் போய், 'நீ கொடுத் தாயாமே'ன்னு கேட்கக் கூடாது. நீ அவசரப்பட்டுப் போக

111

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/110&oldid=1027988" இலிருந்து மீள்விக்கப்பட்டது