பக்கம்:ஆப்பிள் பசி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டாம்! ரெண்டு நாள் கழித்துப் போய்ப் பார். உடம்பைப் பற்றி விசாரி. அன்பா, இதமிா நாலு வார்த்தை பேசிட்டு வா. அதேைல உறவு உடனே ஒட்டிண்டுடும்னு பயப்படாதே!' என்ருள் கோமளம்.

சாமண்ணு வீடு திரும்பினன்.

இரவு முழுவதும் குழப்பமாக இருந்தது. கண்ணை மூடிக் கொண்டு யோசித்தான். சகுந்தலா திடீரென்று தன் பார் வைக்குள் தோன்றியிராவிட்டால்...? 'கடவுள்தான் அப்படி ஒரு பெண் ைஎன் வாழ்க்கையில் குறுக்கிட வைத்திருக்கிரு.ர். அறிவும், அழகும், குலமும், குணமும் உள்ள பெண் சகுந்தலா!

என் லட்சியமே சகுந்தலாவைப் போன்ற ஒரு பெண்ணைக் கைப்பற்றவேண்டும்என்பதுதானே!அந்த அதிர்ஷ்டம்எனக்குக் கிடைக்குமா? இப்போது சந்தர்ப்பம் கூடி வருவது மாதிரி இருக்கிறது. சகுந்தலா என்னை நேசிக்கிருளா? என்னைக் காத லிக்கிருளா? அவள் சிரிப்புக்கும் நெருக்கத்துக்கும் என்ன அர்த்தம்? பாப்பாவையும் சகுந்தலாவையும் தன் மன்த்தர்ாசில் வைத்து எடை போட்டபோது அந்தத் தராசு இப்படியும் அப்படி யுமாக ஆடிக் கொண்டிருந்தது. கடைசியாகச் சகுந்தலா நின்ற தட்டுதான் கனத்துக் கீழே இறங்கியது. யோசித்தான்.புன்முறுவ லாய் அதை அங்கீகரித்தான். w

112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/111&oldid=1027990" இலிருந்து மீள்விக்கப்பட்டது