பக்கம்:ஆப்பிள் பசி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் வார்த்தையில் உள் அர்த்தம் இருப்பது போல் தோன் றியது சாமண்ணுவுக்கு. -

'எனக்கு ரொம்ப நாளா சகுந்தலா மீது ஒரு கண்தான். அப்படி ஒரு நாடகத்துலே நடிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கு மான்னு காத்திண்டிருக்கேன்” என்று அவனும் பொடி வைத்துப் பேசினன். ரொம்ப சாமர்த்தியமாகப் பேசிவிட்ட மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது.

"அதிலே ஒரு சின்னக் குறை' என்று பாவலர் இழுக்க, "அதென்ன?' என்று அவர் சொல்லப் போவதை ஆவலு டன் எதிர்பார்த்தனர் மற்றவர்கள்.

'ரெண்டு பேர் பிரதானமா நடிக்கப் பாத்திரம் இல்லாம இருக்கு.”

"யாரு அந்த ரெண்டு பேர்?' - 'சிங்காரப் பொட்டுவும், சாமண்ணுவும்தான்!” 'அதுக்குத்தான் நான் சொல்ல வந்தேன்' என்று சிங் காரப் பொட்டு எழுந்து நின்ருன்.

'சொல்லுங்க' என்ருர் டாக்டர். 'பெரியவங்க என்னை மன்னிக்கணும். கர்ணு-அர்ச்சுளு' நாடகம் போட்டோம். ஒகோன்னு ஓடியது. பிரமாதமா வசூல் ஆச்சு. இந்த நாடகம் ஒடினத்துக்குக் காரணம் எல்லாரோட ஒத்துழைப்புன்னு சொன்ன மட்டும் போதாது. சாமண்ணுவின் பங்குதான் பெரிய பங்கு.அவரது நடிப்புத்தான் தூக்கிநின்னுது. அவர் பாட்டுத்தான் இன்னிக்குப் பொது ஜனமே பாடரு. அவர் வசனத்தைத்தான் சின்னச் சின்ன வாண்டுகளெல்லாம் கூடப் பேசுது! அதனலே இந்த சகுந்தலை நாடகத்தையே நாம் எடுத்து நடத்துவோம். எனக்குச் சந்தர்ப்பம் கொடுக்கறது முக்கியமில்லை. துஷ்யந்தன் பாத்திரத்துக்குச் சாமண்ணுதான் பொருத்தமானவன். இதில் சாமண்ணுவை ஹிரோவாக்கு வோம். ஒரே ஒரு ஹீரோ போதும். அது சர்மண்ணுவாகவ்ே இருக்கட்டும்.நானே இப்படிச் சொல்கிறேன் என்ருல்பார்த்துக் கொள்ளுங்களேன்.'

சிங்காரப் பொட்டு உட்காரும் போது எல்லோரும் கைதட்டி ஞர்கள்.

'சிங்காரப் பொட்டே ஹீரோவா இருக்கட்டும்' என்று சாமண்ணு வற்புறுத்திய போதிலும் யாரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சகுந்தலா தன் அப்பாவின் காதோடு ஏதோ ரகசியம் பேசினன். உடனே டாக்டர் எழுந்து நின்று, 'இந்த நாடகம் ஓடின, சாமண்ணுவாலேதான் ஒடும்' என்று தீர்க்க மாய் அடித்துச் சொன்ன போது எல்லோரும் கைதட்டி ஆமோ தித்தார்கள்.

ஒத்திகை இரவும் பகலுமாக நடந்தது. பாவலர் தலைமை யில் சங்கீதப் பயிற்சிகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்

- 117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/115&oldid=1028000" இலிருந்து மீள்விக்கப்பட்டது