பக்கம்:ஆப்பிள் பசி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன. சிங்காரப் பொட்டு இந்த முறை டைரக்டர் வேலையைத் தானே எடுத்துக் கொண்டார். # * ... . . .”

தமிழ் வருடப் பிறப்பன்றே அரங்கேற்றம் என்று முடிவெ டுத்ததும் எல்லோர் உள்ளத்திலும் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. சாமண்ணு, உள்ளத்தில் கரை புரண்ட உற்சாகத்தைத் தன. நடிப்புத் திறமையால் அடக்கிக் கொண்டான்_துஷ்யந்தன் கதையைக் கேட்டதும் தன் கையிலிருந்த மோதிரத்தை ஒரு முறை அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டான். - -

ஒவியர் கேசவன் பிள்ளை தூரிகை எடுத்து, காட்சு சின், ஆசிரம சீன், துஷ்யந்தன் தர்பார் எல்லாவற்றையும் கண்கவர் வண்ணமாகப் படுதா’வில் உருவாக்கிக் கொண்டிருந்தார்.

நாடக ஒத்திகைக்குச் சகுந்தல நாள் தவருமல் வந்து கொண்டிருந்தாள்., -

சாமண்ணுவின் அருகில்அமர்ந்துவசனங்களை ஞாபகப்படுத் தும் சாக்கில் அவனைத் தொட்டுப் பேசும் போதும் சாமண்ணு அந்த வசனங்களை எடுப்பாகப் பேசும்போது சபாஷ் போடும் போதும் ஒரு கிளுகிளுப்பை உண்டாக்கிள்ை.

"மிஸ்டர் ஸாமு...' என்று 'ச'வுக்குப் பதில் அவள் 'ஸ்’ போடும் போது சாமண்ணுவுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. தமிழ் அவள் இனிய குரலில் கொஞ்சி வருவது போல் தோன்

யது. - றி 'ஸாமு! எனக்கு இந்த வசனம் ரொம்பப் பிடிச்சிருக்கு!” என்று ஒருநாள் அவள் சொல்ல, 'எது?” என்று கேட்ட்ான் சாமண்ணு. - -

நோட் புக்கைத் திருப்பிக் காண்பித்தாள் அவள். 'ரவிகுல திலகரே! இந்த அடியாளின் மனக்கிடக்கையை இன்னும் நீர் அறியீரோ? அன்ருெரு நாள் என் காலில் தைத்த முள்ளை எடுத்து என் பாதத்தைத் தடவி விட்டீரே! அது தங்கள் நினைவில் உள்ளதா? இன்று என் மனமெல்லாம் முள் தைத்தது போல் நான் வேதனைப்படுகின்றேன். காதல் என்கிற அந்த முள் நெருஞ்சி முள்ளைக் காட்டிலும் கொடியது ஆயிற்றே! இந்த முள் தைக்கப்பட்டவர்களுக்கு அன்னம் பிடிக்காது. பானம் பிடிக்காது. துயில் பிடிக்காது. விரக தாபத்தில் உடம்பு அனலாய்க் கொதிக்கும்! சுந்தரா, சுகுமாரா! என் தாபம் அறிந்து தாங்கள் உடனே வர மாட்டீரா?”

சகுந்தலா இந்த வசனத்தை நின்று நிதானித்து வாசிக்கும் போது அந்த வசீகரமான குரலில் ஓர் ஏக்கம் தெரிந்தது.

'ஏது: நீங்களே சகுந்தலாவா ஆயிட்டீங்க போல இருக்கே!” என்ருன் சாமண்ணு.

"இது வெறும் நடிப்புன்னு நீங்க நினைக்கிறீங்களா, ஸாமு...? -

118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/116&oldid=1028003" இலிருந்து மீள்விக்கப்பட்டது