பக்கம்:ஆப்பிள் பசி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இவர்தான் கோவர்த்தன் சேட். பம்பாயிலிருந்து பயாஸ் கோப் எடுக்கணும்னு இங்க வந்திருக்காங்க. அப்பாவுக்கு ரொம்ப வேண்டியவங்க' என்று அவர்களை அறிமுகப்படுத்தி ளுள் சகுந்தலா. -

கோவர்த்தன் சேட் சாமண்ணுவை அப்படியே தழுவிக் கொண்டார். 'இந்தாங்க, பிடியுங்க! அட்வான்ஸ்' என்ருர்,

‘'எதுக்கு இந்த அட்வான்ஸ்? என்ன சமாசாரம்?' என்று ஒன்றும் புரியாமல் விழித்தான் சாமண்ணு. .

"பம்பாயில் இந்த சகுந்தலா நாடகத்தை அப்படியே மூவி எடுக்கப் போருேம். நீங்கதான் ஹரோவா நடிக்கறீங்க. அடுத்த மாசம் கல்கத்தாவில் நடத்தலாம்னு திட்டம்” என்று சொல்லி ஒரு கவரையும் ஸ்டாம்ப் ஒட்டிய பேப்பரையும் சாமண்ணுவிடம் நீட்டினர் கோவர்த்தன் சேட். அந்தக் கவரில் ரூபாய் ஐயாயிரம் இருந்தது!

120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/118&oldid=1028008" இலிருந்து மீள்விக்கப்பட்டது