பக்கம்:ஆப்பிள் பசி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்தொகை ஒன்று கைக்குக் கிடைத்ததும் சாமண்ணா வின் மனம் கிறுகிறுத்தது. சட்டென தாயாரின் முகம் மின்னி மறைந்தது. தாயின் கையில் அதைக் கொடுப்பது போலவும், அவள் காலில் விழுந்து வணங்குவது போலவும், அவள் ஆனந்தக் கண்ணீரோடு நிற்பது போலவும் தோன்றியது.

“சேட்ஜி! நாடகம் அரங்கேத்தணும். உடனே நான் கல்கத்தா வருவதென்பது ரொம்பக் கஷ்டம்...

“'காமிராக்காரர், டைரக்டர் எல்லாரும் காத்திருக்காங்க, அடுத்த வாரமே ஷூட்டிங் ஆரம்பிச்சுடணும். அவங்களை சும்மா வச்சிருக்க முடியாது. 2.ங்களுக்கு வர முடியலேன்னா சொல்லிடுங்க. வேறே ஒருத்தரைப் போட்டு எடுத்துடறோம். “இல்லை சேட்ஜி! நான் வந்துடறேன்!

“அப்போ முதல் வகுப்பு டிக்கெட் எடுத்துரலாமா? “சரி என்றான். 

“'கல்கத்தாவுக்குத் தந்தி கொடுத்துரலாமா? இன்னொரு சரி. உங்களுக்குத் தனி ஜாகை எடுத்துக் கொடுத்துடறேன் . சவாரிக்குக் காரும் கொடுத்துடறேன். சேட் வியாபார தந்திரத்தில் கைதேர்ந்தவர். எதைச் சொன் னால் ஆட்கள் பறப்பார்கள் என்று அறிந்தவர். 'சாமண்ணா அதற்குள் பெரிய கோட்டை கட்டத் தொடங்கி விட்டான். முதல் வகுப்பு மெத்தையில் ஜம்மென்று சாய்ந்து பிரயாணம் செய்வது போலவும் எதிரே சில பணக்காரப் 121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/119&oldid=1030384" இலிருந்து மீள்விக்கப்பட்டது