பக்கம்:ஆப்பிள் பசி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னவோ போல இருந்தது.

பேச்சில் கோர்வை அறுந்து போயிற்று. தடுமாற்றத்தோடு தொடர்ந்தான்.

நான் என்னமோ தீர்மானிச்சுட்டேன் மாமா! டாக்டர்கிட்டே நாடகப் பணத்தைத் திருப்பித் தந்துடறேன்னு கூடச் சொல்லிட்டேன். ஒரு மாசம் தள்ளி அரங்கேற்றத்தை வச்சிக்கிறதா இருந்தா வச்சுக்கலாம்னும் கருராச் சொல்லிட் டேன். அடுத்த வாரம் நான் கல்கத்தா போயாகணும். நான் முன்னுக்கு வரதுக்கு நான் எடுத்திருக்கிற தீர்மானம் இது! நீங்கதான் ஆதியிலிருந்து என் மேலே பாசமும் அக்கறையும் வச்சு எனக்கு வழி காட்டிண்டு வlங்க. அதேைல உங்களை யும் மாமியையும் பார்த்து நமஸ்காரம் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிக்கணும்னு வந்திருக்கேன்' என்று சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தான்.

'நன்ன தீர்க்காயுசோடு இரு!' சாமண்ணு தலைநிமிர்ந்தான். 'அப்போ நான் கல்கத்தா போகலாமில்லையா?”

'தாராளமாப் போ! அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வந்திருக்கு. நீ போறதுக்கு யாரு குறுக்கே நிற்பா? ஆன சட்டம் உன்னை விடாதே!'

'சட்டமா?' சாமண்ணு முகம் விகாரமாய் மாறியது. "ஆமாம்; நீ ஜாமீன்ல்ே இருக்கேங்கறதை மறந்துட்டியா? கொலைக் கேஸ்! நீ இந்த ஊர்ை விட்டு வெளியே ஒரு இஞ்ச் கூட நகர முடியாதே....! போலீஸ்ல விட மாட்டானே!' "என்ன சொல்lங்க வக்கீல் ஸார்! அப்படின்ன நான் கல் கத்தா போகவே முடியாதுங்கறேளா?'

"யாராவது ஜாமீன் கொடுத்தாப் போகலாம். ஜாமீன் யார் அம்பதாயிரம் ரொக்கத்தோட கொடுப்பா?”

சாமண்ணு அதிர்ச்சியோடு நின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/123&oldid=1028020" இலிருந்து மீள்விக்கப்பட்டது