பக்கம்:ஆப்பிள் பசி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

சிTமண்ணு அதிர்ச்சியிலிருந்து விடுபடச் சிறிது நேரம் ஆயிற்று. மெதுவாகத் தலைநிமிர்ந்து வரதாச்சாரி முகத்தை இரண்டு மூன்று முறை பார்த்தான். சுவர்ப் பல்லியாவது கண்ணை ஆட்டும் போல இருந்தது. வக்கீல் முகத்தில் இம்மிச் சலனம் கூடத் தெரியவில்லை.

"அப்போ ஜாமீன் இல்லாமல் விட மாட்டான்னு சொல் lங்களா?' என்று கேட்டான்.

வக்கீல் சற்றுக் கோபமாய்த் திரும்பிப் பார்த்தார். 'என்ன கேட்கிறே நீ? இதென்ன சாதாரண விஷயமா? விளையாட்டா நினைக்கிறியா? கொலைக் கேஸ்! முனகாலாவுக்குத் தெரிஞ்சு துன்ன முட்டியைப் பேர்த்துடுவார்'

கண்களை உருட்டிக் கொண்டு மேலே பார்த்தார். வழக்கமில்லாத தோற்றம் அவனைக் கொஞ்சம் அச்சம் காட்டியது. 'ஒரு ஜாமீன்தான் ஏற்கெனவே இருக்கேன்னு நினைச்சேன்’ என்ருன்.

'அது.நீஊரிலேயே இருக்கணும்என்பதற்குத்தான்.இதைத் தாண்டி ஒரு அடி எடுத்து வைக்க முடியாது... தெரிஞ்சுதா?”

சாமண்ணு கண்ணைக் கொட்டிக் கொண்டு கெஞ்சுதலாய்ப் பார்த்தான். -

'நீங்கதான் இன்ஸ்பெக்டர் முனகாலா கிட்டேசொல்லி... "முனகாலா என்ன எனக்கு மாமன? மச்சாளு? இல்லை கேட்கிறேன்.'

வக்கீல் குரல் உயர்ந்து விட்டது. 'இல்லே, சட்டத்தைத்தான் அவராலே மீற முடியுமா?

126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/124&oldid=1028021" இலிருந்து மீள்விக்கப்பட்டது