பக்கம்:ஆப்பிள் பசி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமண்ணு உடனே கேட்டான். 'ஏன் மாமா, நான் முன்னுக்கு வரணும்னு நினைக்கிறது தப்பா? நான் ஒரு பெரிய சினிமா ஸ்டார் ஆகணும்னு ஆசைப்படறது குத்தமா?'

வக்கீலின் கோபம் முகத்தில் தெரிந்தது. மூக்கு சிவுசிவு என்று ஆகியது. 'உன் லட்சியத்துக்காக நீ மத்தவா முகத்திலே கரியைப் பூசிடறதா? பணம் போட்டவங்க எல்லாம் பட்டை நாமத்தைப் போட்டுக்கணுமா? அதுதான் உன் மரியாதையா? உன் இஷ்டப்படியே செய், போ. இப்பவேபோ என்கிட்டே வாதாடிண்டு நிக்காதே. இனிமே எனக்கு இதிலே அக்கறை கிடையாது!”

துண்டை எடுத்து மேலே போட்டார். நேராகக் கிணற்றடிக் கோடிக்குப் போய்க் கொண்டிருந்தார்.

சந்தர்ப்பம் வெடித்துவிடும் நிலையில் இருந்தது. வக்கீல் நிறைய அடக்கிக் கொண்டு போகிருர் என்பது தெரிந்தது.

சற்று விக்கித்து நின்ருன். பிறகு மெள்ள எழுந்து மெதுவாக வெளியே நடந்தான். .

அடுத்த நாள் தனது பிரச்னையை எடுத்துக் கொண்டு

சாமண்ணு ஊரில் சுற்ற ஆரம்பித்தான்.

பாவலரிடமிருந்து தன் வேட்டையை ஆரம்பித்தான்.

தனது நிலையை அவரிடம் விவரமாய் எடுத்துச் சொல்லி, 'உங்களால் உதவி செய்ய முடியுமா?’ என்று கேட்டான்.

பாவலர் தமக்குள்ள சங்கடங்களை விவரித்தார். தமது கடன் சுமையைச் சொல்லித் தன்னல் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.

அடுத்து ராவ்பகதூரைக் கேட்டபோது, 'இந்தா, சாமண்ணு! இதைப் போல விவகாரத்தையெல்லாம் இங்கே கொண்டு வராதே! நான் ஒரு பிரின்ஸிபிள்காரன். இம்மாதிரி விவகாரம் எல்லாம் எனக்குப் பிடிக்காது” என்ருர்.

பண்ணை பரமசிவத்துக்கு - ஏற்கெனவே கோர்ட்டில் இரண்டு வழக்குகள் நடந்து கொண்டிருந்தன.எனவே, புதுச் சிக்கலில் மாட்டிக் கொள்ள அவர் தயாராயில்லை.

இரண்டு நாள் அலைந்ததில் சாமண்ணுவுக்கு உலகம் சற்றுப் புரியத் தொடங்கியது. எல்லோரும் ஏதாவது ஒரு பிரச்னையை எடுத்துப் போட்டார்கள். உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம்.

'தன்னை ஊர் புகழ்கிறது, தன்னிடம் எல்லோரும் மதிப்பு வைத்திருக்கிரு.ர்கள் என்பதெல்லாம் தூரத்தில் இருக்கும் வரைதான். யாரையும் அண்டி உதவி கேட்காத வரைத்ான்' என்று தோன்றியது.

கவலை உள்ளத்தை பாரமாக அழுத்தியது. கடவுள் தன்னை எப்படியும் கைவிட மாட்டார் என்று நம்பினன். மூன்ரும் ! 3 (?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/127&oldid=1028024" இலிருந்து மீள்விக்கப்பட்டது