பக்கம்:ஆப்பிள் பசி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலுைம் அவனுக்கு பாப்பாவை அண்டுவது அவ்வளவு பிடித்தமான காரியமாகத் தோன்றவில்லை.

டாக்டரிடம் கேட்டால் ತ್ಗ அவனது அடிமனத்தில் e @öF ங்கக. போய்க் கேட்டான். lళ్లి ಘೀ விஷயம் போலீஸ் கேஸ்! நான் ஒரு டாக்டர்! நான் எல்லோர்கிட்டேயும் செளஜன்யமா இருக்கவிரும்பறவன். உன் விஷயத்திலேபலபேர் பலவிதமாப் பேசரு! கடந்த ரெண்டு மூணு நாளா ஊர்லே உன்னைப் பற்றி ஒரே வதந்தியா இருக்கு. இதிலே என் மண்டையும் சேர்த்து உருளறதை நான் விரும்பலே! வேறே என்ன உதவி வேளுலும் கேளு. செய்யறேன்!” என்ருர் டாக்டர்.

ஓர் இருட்டு அடித்தது போல் இருந்தது. டாக்டர் புன்னகை செய்து கொண்டே பேசினர். ‘சகுந்தலா எங்கே? அவளைக் காணவில்லையே... அவள் இருந்திருந்தால்...'

முகம் கவிழ்ந்த நிலையில் வெளியே வந்தான். அவனது முன்னேற்றத்துக்கு ஊரே எதிர்த்து நிற்கின்ருற் போல் தோன்றியது. ஊகூம்! இதை விடக் கூடாது! ஆமாம், விடக் கூடாது!

IDறுநாள் விடியற்காலையில் சாமண்ணு சைக்கிளை எடுத் துக் கொண்டு பூவேலி கிராமத்தை நோக்கிப் புறப்பட்டான். பாப்பா வீட்டு முன்னல் சைக்கிளை நிறுத்திய போது உடம்பு உதறியது. நிமிர்ந்து வாயில் நிலையைப் பார்த்தான்.

அங்கே குமாரசாமி நின்றது சற்று திகைப்பாக இருந்தது. புன்னகை செய்தான்.குமாரசாமி பதில் சமிக்ஞை செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்டது வேதனையாக இருந்தது. 'வணக்கம்' என்று படியில் ஏறி நடையில் நின்மூன். 'என்ன வேணும்?' என்ருர் குமாரசாமி. அந்தக் குரலில் பற்றுதல் இல்லை.

நிலையைப் பிடித்துக் குறுக்கே அவர் நின்று கொண்டிருந் தது அவன் உள்ளே போவதைத் தடுப்பது போல இருந்தது. பழைய உபசாரம் எதுவும் இல்லை. இடுக்கு வழியே உள்ளே பார்த்தான். பாப்பா தென்படவில்லை. எங்கே அவள்?

“என்ன வேணும்?' என்ருர், குமாரசாமி சற்று முறைப் i_!!T&%.

தன் நிலையை விளக்கி விவரங்களைக் கூற ஆரம்பித்தான். இடையில் எப்படியும் பாப்பா அங்கே வந்து விடுவாள் என்று எதிர்பார்த்தான். அவள் வரவில்லை. குமாரசாமி இரக்கம் காட்டுவார் என்று எதிர்பார்த்தான்.

ஆளுல் அவரிடம் எந்தவித மாறுதலும் தெரியவில்லை. எல்லாவற்றையும் கல் போல நின்று கேட்டுக் கொண்டார். அவன் முடித்த பிறகு அவர் ஓர் அழுத்தப் பார்வையாகப் பார்த்தார். - - Ꮧ32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/129&oldid=1028029" இலிருந்து மீள்விக்கப்பட்டது