பக்கம்:ஆப்பிள் பசி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தாங்க! உங்களுக்கு இனிமே நாங்க உதவறதுக்கு வழி யில்லை. ஆமாம்! இந்த மாதிரி பிரச்னை, விவகாரம் எல்லாம் வச்சுக்கிட்டு இனி இங்கே வராதீங்க. நாங்க இதுவரை பட்டது போதும். நீங்க போகலாம்" என்ருர்.

"பாப்பா!'

'அவளை நீங்க பார்க்க முடியாது!'

ஓங்கி முகத்தில் அடி விழுந்தது போல இருந்தது.

சற்று நேரம் வாயடைத்து நின்ருன். பிறகு, 'வரேன் என்று கூறிவிட்டுத் திரும்பி வாசலில் இறங்கி சைக்கிள் ஏறி மிதிக்க ஆரம்பித்தான். கிராமத்துப் பாட்டை வந்ததும் துக்கம் பொங்கி வந்தது. கண்ணிர் பீறிட்டு இருபுறமும் வழிந்தது. கிராமத்து எல்லையைத் தாண்டி அரை மைல் போயிருப்பான்.

அங்கே இன்ளுெரு வழியாக அந்தப் பாட்டையைக் குறுக் கிடும் பாதையில் ஒரு மாட்டு வண்டி வந்து கொண்டிருந்தது. வண்டிக்காரர் ஸ்தானத்தில் பாப்பா உட்கார்ந்திருந்தாள். சோர்வான பாப்பா, அசதியான பாப்பா, மெலிந்து காணப் Lłł - L – 1_1 {J Lł f_ffT.

அவள் கண்கள் அவனையே பார்த்திருக்க, வெலவெலத்து சைக்கிளை நிறுத்தினன். 'இவள் எப்படி இங்கே வந்தாள்?

அவள் வண்டியை நிறுத்திக் கீழே இறங்கி வந்து அவன் எதிரில் நின்ருள். 7 - -

y

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/130&oldid=1028031" இலிருந்து மீள்விக்கப்பட்டது