பக்கம்:ஆப்பிள் பசி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறும் கையா அனுப்பறதைப் பார்த்துட்டேன். நேரே பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு வந்துட்டேன். மனசு கேட்கல்லே. அப்பா பேசினதெல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்’ கண் கலங்கி நின்ருன்.

'வீட்டிலே இருக்கும் போது நீங்க வருவீங்கன்னு எதிர் பார்த்தேன்.”

"எதிர்பார்த்தாயா?” அந்த ஒரு கேள்விக்கு மட்டும் அவனது ஆவலான பழைய குரல் திரும்பிவந்தது. -

"ஆமாம்!” என்ருள் அவள். பாப்பாவின் கண்கள் பலமுறை கொட்டின. உடம்பு வாடியிருந்தாலும், முகம் சந்திர ஒளி அடித்தது. 'உங்கப்பா என்ன துச்சமாப் பேசிட்டார் பார்த்தயா? மனசு துவண்டு போச்சு' என்ருன் அவன்.

நெற்றியைத் துடைத்துவிட்டு கொண்டாள். 'என்ன்ைப் பற்றியே நொந்துக்கிட்டேன். பிறந்தா வசதி யோடுபிறந்திருக்கணும்.இல்லாட்டிபிறக்கக்கூடாது.கையேந்தி நாலுபேர்கிட்டேஉதவிக்குப்போன.இப்படித்தான் அவமானப் படனும்,' -

பாப்பாவின் கண்களில் அநேகமாக நீர் ததும்பி விட்டது. 'என்னவோ தெரியலை! என் புகழே எனக்கு எதிரே வேலை செய்யறதாத் தோணுது! உங்கப்பா என்னை இவ்வளவு கேவலமா நடத்துவார்னு நான் எதிர்பார்க்கலை. என் தலைவிதி' என்று தலைகுனிந்து கொண்டான் சாமண்ணு.

'நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். உடம்பு இன்னும் சரியாகல்லை எனக்கு! தொய்ஞ்சு போய்ப் படுத்துடறேன். நீங்க வந்து பேசிக்கிட்டிருக்கீங்களா? அப்பா வேறே கூப்பாடு போட்டுட்டிருக்காரா? எனக்கான மனம் கிடந்து அடிச்சுக்குது. எழுந்துக்கணும்னு பார்க்கிறேன். முடியல்லே. மனசை திடப்படுத்திட்டு நான் எழுந்திருக்கிறதுக்குள்ளே நீங்க போயிட் டீங்க, பதறிட்டேன். உங்க மனசு என்ன பாடுபடுதோன்னு தவிச்சுப் போயிட்டேன். அப்பா இருந்த நிலையிலே உங்களைத் திரும்ப அழைக்க மாட்டார்னு தெரிஞ்சுப் போச்சு. நானும் அவர் முன்னடி வந்து உங்களைக் கைதட்டிக் கூப்பிட முடியல்லே. பார்த்தேன். வண்டியைக் கட்டித் தோட்டப் பக்கமா குறுக்கு வழியிலே வந்துட்டேன்.'

பாப்பாவுக்கு மூச்சு இழைத்தது. நுகத்தடியில் ஒரு கையை ஊன்றிக் கொண்டாள். .

'நீ வந்ததுக்கு சந்தோஷம். நீ தேவதை மாதிரி எதிரில் வந்து நிற்கிறதைப் பார்க்கிறப்போ, மனசிலே என்னென்னவோ தோணுது. ஏதேதோ பேசனும் போல இருக்கு. ஆன உன்னேட மனம் விட்டுப் பேச முடியாமல் தவிக்கிற்ேன். என்னை மன்னிச்சுடு பாப்பா!' .

13.5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/132&oldid=1028066" இலிருந்து மீள்விக்கப்பட்டது