பக்கம்:ஆப்பிள் பசி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறைத்தது. சாமண்ணுவுக்கு அந்த மணம்ரொம்பப் பிடிக்கும். பெரிய மனிதர்கள் வீட்டு போர்டிகோவில் இப்படித்தான் ಧಿ வீசும் இழுத்து இழுத்து அதை அனுபவித்திருக் ருன:

ஒரு கணத்தில் அதிலிருந்து சகுந்தலுரு இறங்குவது போல வும், நீளப் படிக்கட்டுகளில் இடுப்பை இப்படியும் அப்படியும் வளைத்து ஏறுவது போலவும் காட்சி துவங்கியது. மனசில் இன்பச் சுரப்பிகள் நிறையச் சுரந்தன.

அவன் பார்வையில் ஏற்பட்ட மோகத்தை வராகசாமி நொடியில் அறிந்து கொண்டார்,

எழுந்தார். 'வெள்ளோட்டம் பார்த்துடுவோமா?' என்ருர். அவர் முன்னே செல்ல, சாமண்ணு பெரிய சமஸ்தானதி பதி போல் பின்னே சென்ருன்.

வரி வரியாகப் படிகள். நான்கு படிகள் இறங்கியதும், கிசுகிசு என்று காதில் குறுகுறுத் தது. • * ' -

சாமண்ணு சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தான். அது ஒரு விஸ்தாரமான தெரு. அதன் நீள வியாபகம் பூராவும் கண்ணில் தெரிய, அத்தனை வீட்டு வாசலிலும் அவரவர் நின்று, அந்த ஸ்ெடானையும் சாமண்ணுவையும் வினோதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். -

அந்தக் காட்சி நெஞ்சில் ஆழ்ந்து படிய, சாமண்ணுவின் நடையில் மிடுக்கு ஏறியது. பார்வையில் ஒரு பெரிய மனுஷத் தனம் தொற்றியது. கம்பெனி டிரைவர் காக்கிச் சட்டை யூனி பாரத்தில் சாமண்ணுவுக்கு ஒரு ஸல்யூட் அடித்தான், பிறகு பின்புறக் கதவை உலோக நாதத்துடன் அவன் திறக்க, ஏராளமான சூரியப் புள்ளிகள் நாலாபுறமும் சிதறின.

சாமண்ளு ஏறிக் கொண்டான்., nட்டில் அமர்ந்த போது ஏதோ இங்கிலீஷ்காரி மடியில் அமர்ந்தது போல் அவ்வளவு சொகுசாக இருந்தது.

டிரைவர் அந்தக் கதவை ஓர் அடிமைப் பணிவோடு குனிந்து அடைத்துவிட்டு, முன் பக்கம் போய் பானெட் துவாரத்தில் நீளக் கம்பியைக் கொடுத்து விருட் விருட்டென்று சுழற்றி மோட்டாரைக் கிளப்பிஞன். -

இரைச்சலோடு சிறுசிறு குவியல்களாகப் புகை விட்டுக் கொண்டு ஜம்மென்று புறப்பட்டது கார்.

ஏழை சாமண்ணு அவனிடமிருந்து உதிர்ந்து விட்ட மாதிரி இருந்தது. - –

கார் ஊரை விட்டுப்பெருஞ்சாலையில்ஒடியபோதுகப்பலில், மிதப்பது போன்ற உணர்வில் பிரயாணம். உடம்பு அதிகம் நலுங்கவில்லை. சிலுசிலு என்று முகத்தில் வீசிய காலைக் காற்றின் குளுமை கன்னத்தில் கொஞ்சியது.

- 143

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/139&oldid=1028080" இலிருந்து மீள்விக்கப்பட்டது