பக்கம்:ஆப்பிள் பசி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று காலையில் பாப்பாவைப் போய்ப் பார்க்க வேண்டு மெனத் திட்டமிட்டிருந்தான். வக்கீல் மாமி கண்டிப்பாய்ச் சொல்லி அனுப்பிய வார்த்தைகள் காதில் ரீங்கரித்தன. இப்போது பர்ப்பாவின் நினைவு வர சாயங்காலம் போய்ப் பார்த்தால் போயிற்று என்று பயணத்தைத் தள்ளிப் போட் டான். இந்தக் க்ாரின் சுகத்தை அடைய புது ஜன்மமே எடுக்க வேண்டும். -

பதினேரு மணிக்குக் கார் திரும்பியது. 'மாலையில் அந்த 'மல்லிகை ஒடை வரை இன்னொரு வெள்ளோட்டம் போய் வரலாமா?' என்று வரர்க்சாமி ஆசையைக் கிளப்பி விட்டார்.

இந்து மைலில் மல்லிகை ஓடை இருந்தது. அதன் இரு கரைகளிலும் மல்லிகைப் பந்தல்கள் மண்டிக் கிடந்தன! அவற்றை ஒட்டிற்ைபோல் தென்னை மரங்கள். மாந்தோப்

ᏜᏡ❍Ꭲ , Ll கார் அருந்ததி தெருவைத் தாண்டிய போது சாமண் ண, 'நிறுத்து' என்ருன். -

அங்கே பெரிய மைவிழிகளோடு சகுந்தலா அவன் காரில் சல்வதை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

"எங்கே இப்படி?' என்று அவன் கேட்க, 'கார் வாங்கியாச்சா?' என்று ஆவல் தெறிக்க அருகே வந்தாள் சகுந்தலா. -

நீல நிற ஸில்க் அணிந்து, பளிச்சென்று வெட்டும் மோதிரம் அணிந்திருந்தாள். கண்கள் நீலங்களாக ஒளிர்ந்தன. சிவந்த உதடுகள்.

சாமண்ணுவின் கண்கள் பிரமித்தன. 'கார் வெள்ளோட்டம் பார்க்கிறேன்.” 'ஒ! பிரமாதம்!' 'ஏறிக்குங்க!திருப்பிக்கொண்டுவந்துவிடறேன்' என்ருன். புன்னகை குழிய ஏறிஞள். கார் ஓடைக்கரை நோக்கிப் பறந்தது.

y

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/141&oldid=1028082" இலிருந்து மீள்விக்கப்பட்டது