பக்கம்:ஆப்பிள் பசி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

LDல்லிகை வாடை அடர்ந்து கமழ மந்தார வானம் வெயிலைத் தணித்தது. தென்னம் ஒலைகள் வானத்தை வரி வரியாகக் கீறியது. கிள்ளைகளின் குரல்கள் அடுத்தடுத்துக் கொஞ்சின.

கார் ஒரிடத்தில் போய் நிற்க, சாமண்ணுவும் சகுந்தலாவும் கீழே இறங்கித் தென்னே நிழல்களில் நடந்தார்கள். வெகு தூரம் நடந்த பின்னர் மனித நடமாட்டம் இல்லாத இடத்தை அடைந்தார்கள். .

தூரத்தில் குன்றுகள் மெல்லிய நீலத்தில் தெரிந்தன. சுற்றி வரப் பயிரும் தழையும் சேர்ந்து பசும் சோலையாக இருந்தன.

இருவரும் ஒரு பாறை அருகே நின்ற போது அதன் ஒரமாக மாலை போலச் சிறு ஒடை மினுக்கிக் கொண்டிருந்தது.

'என்ன அழகாக இருக்கு பாருங்க!' என்ருள் சகுந்தலா. சாமண்ணுவின் உள்ளத்தில் கீதம் போல் ஒரு கிளுகிளுப்பை உண்டாக்கியது ஒடைத் தண்ணிர். அவன் ஒரு போதையில் தோய்ந்தான். ஸ்ெடானும் சகுந்தலாவும் அவனை முற்றிலும் மாற்றியிருந்தார்கள். மூச்சு கூட இன்பத்தில் திணறியது.

'இனி வாரம் ஒரு முறையாவது இங்கே வரணும் சாமு!' 'நீயும் நானும் மட்டும்தானே!" 'எனக்கு இன்னிக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை! அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கேன்' என்ருள்.

'நானும் அப்படித்தான்.” - இருவர் கண்களும் பின்னிக் கொண்டு நின்றன. சகுந்தலா தாழம்புதர் ஒரம் சுற்றி வர 'ஆ' என்ருள்.

147

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/142&oldid=1028085" இலிருந்து மீள்விக்கப்பட்டது