பக்கம்:ஆப்பிள் பசி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"போதுமே! அதுவே கோடி பெறும்!” சாமண்ணு மேலே பேசவில்லை. எல்லாம் சொல்ல வேண் டும் என்று நினைத்தவன், எதுவும் சொல்ல முடியாமல் மெளனமாய் விட்டான்.

தூரத்தில் கார் வரும் ஓசை கேட்டு அவன் திரும்ப, அவளும் விலகிச் சாலையைப் பார்த்தாள். அந்த ஸெடான் அவர்கள் அருகே வந்து கொண்டிருந்தது.

'ஸார்! நீங்க கையைக் காட்டின மாதிரி இருந்தது. அதான் வந்துட்டேன்!” என்ருர் டிரைவர்.

இருவரும் வண்டியை நோக்கி நடந்தார்க்ள். பொழுது சாய்ந்துகொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கு அப்போது தான் தெரிந்தது.

திரும்பும் பிரயாணம் பூராவும் அந்த இனிமை மெளனம் நீடித்தது.

அந்த இனிமையில் பாப்பாவின் நினைவு மறந்தே போய் விட்டது அவனுக்கு.

முன்ருவது நாள்தான் அவனது கல்கத்தா பயணம்!

காலையில் சிங்காரப் பொட்டு பெரிய மாலையுட்ன் சாமண்ணுவின் கழுத்தில் அந்த மாலையைப் போட்டு விட்டு, 'நீங்க பெரிய நடிகரா வரணும்' என்று கைகூப்பி வணங்கினர். இருவரும் தழுவிக் கொண்டார்கள். - -

சிங்காரப் பொட்டு இவ்வளவு நல்ல உள்ளத்துடன் வந்து

தனக்கு நல்வாழ்த்துக் கூறியது சாமண்ணுவின் உள்ளத்தைத் தொட்டது. -

மத்தியானம் அவன் ரயில் நிலையத்திற்குப் புறப்பட்ட போது, பலரும் நிலையத்திற்குத் தன்னை வழி அனுப்ப வருவார் கள் என்று எதிர்பார்த்தான்.

ஆனல், ரயில் நிலையத்துக்குப் போன போது பிளாட்பாரத் தின் வெறுமை அவனுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. அங்கு பயணிகளைத் தவிர அவனுக்குத் தெரிந்தவர்கள் யாரை யுமே காணவில்லை. * T - - -

நாடகக் கம்பெனி ஆசாமிகளைக் கூடக் காணுேம். இன்னும் வக்கீல், டாக்டர், பாவலர் ஒருவருமே வரவில்லை!

முதல் வகுப்பில் போய் ஏறிக் கொண்டான். அவனைத் தவிர அந்தப் பெட்டியிலும் வேறு பயணிகள் யாரையும் காண வில்லை. வண்டி புறப்படுகிற போதாவது யாரேனும் வருவார் களா என்று எதிர்பார்த்தான். முதல் மணி அடித்து இரண்டாம் மணியும் அடித்தாயிற்று. எவருமே அவன் கண்ணில் தென்பட ఎము. மனம் வெதும்ப, எழுந்து வந்து, வாயில் நிலையைப் பிடித்து நின்ருன். வண்டி புறப்பட்டு விட்டது. அப்போதுதான் அந்த வெறுமை அவன் மனசில் இறங்கியது. - 150

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/145&oldid=1028089" இலிருந்து மீள்விக்கப்பட்டது