பக்கம்:ஆப்பிள் பசி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேற்று வரை எல்லோரும் எப்படித் தன்னைப் போற்றிப் புகழ்ந்தார்கள்! இன்று அவர்களில் யாருமே ரயில் நிலையத்திற்கு வரவில்லையே! தனக்குள்ளாக நினைத்துக் கொண்ட அந்தஸ்து, மதிப்பு, கெளரவம் எல்லாம் வெறும் ஏமாற்று விஷயங்கள் தானே? சகுந்தலா? அவளையும் காளுேமே!

வண்டி நகர்ந்து கொண்டிருக்க, பிளாட்பாரத்தில்

தூரத்து கேட்டைத் திறந்து அந்த உருவம் வந்து கொண் டிருக்க, சாமண்ணு வெளியே எட்டிப் பார்த்தான். கையை உயர்த்தி, ஆட்டினன். ஆனல் அதற்குள் வண்டி வேகம் பிடித்து விட்டது. உருவத்தின் ஒட்டம் அதனோடு ஈடுகொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அது இழைத்துக் கொண்டு நிற்க, சாமண்ணு கண்ணை அகலத்தில் கொண்டு பார்த்தான்.

யார் அது? சகுந்தலாவா? பாப்பாவா?

உயரம் பார்த்தால் பாப்பா மாதிரி தெரிந்தாள்.

ஆனல் அந்த நடை சகுந்தலா போலவே தோன்றியது.

சாமண்ணுவுக்கு ஒரு நிச்சய நினைவு. சகுந்தலாவைத் தவிர வேறு யார் இப்படி ரயில் நிலையம் வர முடியும்? இதற்கெல்லாம் ஒரு நாகரிகம் வேண்டுமே! அது சகுந்தலாவுக்குத்தான் உண்டு. பாப்பாவிடம் நிச்சயம் இராது. - -

பிளாட்பாரம் மங்கியதும் சாமண்ணு உள்ளே தலையை இதுள் அவனுக்கு நிம்மதி இல்லை. இருக்கை கொள்ள வில்லை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/146&oldid=1028091" இலிருந்து மீள்விக்கப்பட்டது