பக்கம்:ஆப்பிள் பசி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

"அவன் கண்ணிலே நன்கு பட்டயோ இல்லையோ?” என்று கவலையோடு கேட்டாள் கோமளம்.

"என்னை நல்லாப் பார்த்துட்டார். கையை ஆட்டினரே!' 'கையை ஆட்டினை?” 'ம். சன்னலுக்கு வெளியே கை நீட்டி ரொம்ப நேரம் டடிஞ)ா. 'போடி அசடு! நீ கொஞ்சம் சீக்கிரம் போயிருக்க வேண் டாமோ !”

பாப்பா கவலை தோய்ந்த முகத்துடன் சாமண்ணுவின் நினை வில் லயித்தவளாய் ஊஞ்சலில் உட்கார்ந்தாள்.

"நான் என்ன செய்வ்ேன் மாமி! அப்பாவுக்குத் தெரியாமல் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியிருந்தது.'

'அவர் கோபம் தணியலையா?”

'இன்னும் இல்லை! நாடகக்காரன் சகவாசமே வச்சுக்கா தேன்னு தீர்மானமாச் சொல்லிட்டார். அப்படியிருக்கும் போது, அப்பா முன்னலே எப்படி நான் வெளியே புறப்பட முடியும்? அதலை அவர் வெளியில போற வரை காத்திருந் தேன். அப்புறம்தான் குதிரை வண்டியைப் பிடிச்சு.... ஒரே வேகமா ஸ்டேஷனுக்குப் போனேன். இறங்கி டிக்கெட் வாங் கிட்டுப் போய்ப் பார்க்கிறேன். ரயில் நகர்ந்துக்கிட்டிருக்கு! மனசெல்லாம் கிடந்து தவிச்சுது. அடடா! ஏமாந்துட்டே னேன்னு நினைச்சேன்.' -

'அவனை வழி அனுப்ப யாராவது வந்தாங்களா?'

I52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/147&oldid=1028094" இலிருந்து மீள்விக்கப்பட்டது