பக்கம்:ஆப்பிள் பசி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"யாரும் வந்ததாத் தெரியலே.' 'சிங்காரப் பொட்டு....?' "அவர் வீட்டுக்கே போய் வழி அனுப்பிச்சுட்டார்னு அப் புறம்தான் தெரிஞ்சுது. ஸ்டேஷனுக்கு யாருமே.வரல்ல்ே."

'தெரியும் பாப்பா. அப்படித்தான் நடக்கும்னு எனக்குத் தெரியும். யாருக்கும் அவன் கல்கத்தா போறதில் இஷ்டமில்லை." "அது என்னவோ! நான் முதல் வகுப்பைத் தேடிக் கண்டு பிடிச்சு, கையைத் தூக்கிக் காண்பிச்சு அதை நோக்கி ஒடறதுக் குள்ளே, ரயில் ரொம்ப தூரம் போயிருச்சு, அது அவர்தான்னு புரிஞ்சுக்கிட்டேன். ஏன்ன பெட்டி வாசல்லையே நின்ஞர். அந்தச் சால்வையைப் போர்த்திக் கொண்டு.'

கோமளம் துணுக்குற்ருள். 'சகுந்த்லா போர்த்தின சால்வையா?” "ஆமாம்! அதேதான். அந்த நீலக் கலர் சால்வையேதான். நல்லர்த் தெரிஞ்சுதே!' என்று துக்கம் தொண்டையை அடைக்கக் கூறினாள் பாப்பா!

'அதனலென்ன! அவன்கிட்டே வேறே சால்வை இருந் திருக்காது. இப்போதானே அவனும் நாலு பேர் பார்க்கும் படியா மனுஷனயிருக்கான். பாப்பா ! எனக்கு என்னவோ ஒரே சந்தோஷமா இருக்கு! உன்னைப் பார்த்துட்டுக் கையை ஆட்டினன் பாரு'

'அது சரிதான் மாமி! எனக்கு இப்போ வருத்தம் என்னன்னு, அவர் போய் ஒரு வாரம் ஆச்சு. இதுவரைக்கும் ஒரு லெட்டர் போடல்லை. இப்படி இருக்கலாமா?' என்ருள் பாப்பா தாபத் தோடு.

'ஒரு வாரந்தானே ஆச்சு? ஒரு மாசம் ஆகல்லையே! போன இடத்திலே என்ன அசந்தர்ப்பமோ !! அதுக்குள்ள லெட்டர் வரலேன்னு குறைப்படலாமோ! அப்புறம் பாரு பாப்பா! என்னதான் இருந்தாலும் அவன் ஒரு இள வயசுப் பிள்ளை. உனக்கு நேராக் கடிதம் எழுதுவானே? எங்களுக்கு எழுது வான். அதிலே, பாப்பா செளக்கியமா, பாப்பாவை விசாரித்த தாகச் சொல்லுங்கோன்னு போடுவான். உனக்கு நேரா எழுதக் கூச்சப்படுவான்' என்ருள் கோமளம்.

மாமி அப்படிச் சொன்னது பாப்பாவுக்கு நியாயமாகப் பட்டது. கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது.

அவளை மீறி ஒரு புன்னகை அவளது உதட்டில் அரும்பியது.

奖 + 共 蚤 姜

"அன்புமிக்க சகுந்தலாவுக்கு வணக்கம்,

கல்கத்தா போய்ச் சேர்ந்ததும் உங்களுக்குத்தான் முதல் கடிதம் எழுதுகிறேன். ஊர் இங்கே இந்திரலோகம் போல. . . . 153

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/148&oldid=1028096" இலிருந்து மீள்விக்கப்பட்டது